கடனைத் திருப்பிச் செலுத்தாதற்காக வாலிபரை அடித்துக் கொலை செய்த கடன்காரர்கள்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ரூ. 8 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த நபரை, வீடு புகுந்து கடன் கொடுத்தவர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் துணிக் கடை வைத்திருந்தார். கடையை விரிவுபடுத்துவதற்காக முகம்மது ரியாஸ் மற்றும் காலித் ஆகியோரிடம் மொத்தமாக ரூ. 8 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மஜீத் வீட்டுக்கு, காலித்தும், ரியாஸும் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்தது. இதையடுத்து காலித்தும், ரியாஸும் சேர்ந்து மஜீத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மஜீத் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை உஸ்மானியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். அதன் பின்னர் அவரது நிலைமை மோசமானது. இதையடுத்து நிம்ஸ் மருத்துவமனைக்கு மஜீத்தை மாற்றினர். அங்கு அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் மஜீத் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட காலித், ரியாஸ் ஆகியோரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications