நிழல் உலக தாதா சோட்டா ராஜனும்.. விநாயகர் சதுர்த்தியும்: சர்ச்சை ஃபேஸ்புக் பக்கம்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையைவிட்டு நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் உள்ளிட்ட பலரும் தப்பி ஓடி வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களில் சோட்டா ராஜன் மலேசியாவுக்கு அருகே தீவுகள் ஒன்றில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் எப்போதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.. அதன் விவரம்:
- மும்பையில் விநாயகர் சதுர்த்தி காலத்தில் விநாயகர் சிலைகளை வைத்து பிரமாண்ட பந்தல்கள் அமைத்து பிரபலங்களை அழைத்து நாள்தோறும் வழிபாடு செய்வது வழக்கம்.
- விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்துவதற்கான அமைப்புகள் "மண்டல்கள்" என்று அழைக்கப்படுகின்றன.
- மும்பை, திலக் நகரில் உள்ள Sahyadri Krida Mandal என்ற விநாயகர் சதுர்த்தி விழாக் குழு கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளது.
- நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள், பூனம் மகாஜன், யுவராஜ்சிங் என அத்தனை பிரபலங்களும் இந்த திலக் நகர் விநாயகரை வழிபட படையெடுத்து வருவதால் அனைவரும் உற்றுப் பார்க்கின்றனர்.
- இதன் ஃபேஸ்புக் பக்கமானது Sahyadri Krida Mandal என்ற பெயருடன் இல்லாமல் Sahyadri Krida Mandal.R என்ற இன்ஷியல் சேர்ந்துள்ளது.
- இந்த Sahyadri Krida Mandal.R என்ற இன்ஷியல் நிழல் உலக தாதா சோட்டா ராஜனைத்தான் குறிக்கிறது என்பது மும்பை ஊடகங்கள்.
- தீவிர விநாயகர் பக்தரான சோட்டா ராஜன்தான் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தமது அடியாட்கள் மூலம் நிதி உதவி செய்துள்ளாராம்.
- அத்துடன் சோட்டா ராஜனின் ஆலோசனைப்படிதான் இந்த ஃபேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டதாகவும் அதனால்தான் 'R" என்ற இன்ஷியல் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
- இது குறித்து கருத்து தெரிவித்த மண்டல் பொறுப்பாளர் ராகுல், அனைத்து விழாக்குழுக்களைப் போலத்தான் நாங்களும் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளோம்' என்றார்.
- அதே நேரத்தில் ஏன் இன்ஷியல் R போடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மவுனத்தையே பதிலாக கொடுத்து அனுப்பியுள்ளார் நிர்வாகி ராகுல்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications