ஏ.டி.எம் - க்குள் புகுந்து பெண் மீது துப்பாக்கிச் சூடு… நகை, பணத்தை பறித்த கொள்ளையன்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில், வங்கி ஏ.டி.எம்.- ல் பெண் ஒருவர் பணம் எடுத்த போது உள்ளே புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தி பணத்தையும், நகையையும் பறித்துக் கொண்டு தப்பிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

யூசுஃப்கடா என்ற பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இந்த சம்பவம் இன்று காலை நிகழ்ந்தது.

சுமார் 7.30 மணிக்கு பெண் ஒருவர் தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றார். இதனை அங்கு நின்ற ஒருவன் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த பெண் பணம் எடுத்து முடித்ததும், திடீரென்று ஏ.டி.எம். அறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு அந்த பெண்ணை பயமுறுத்தியுள்ளான்.

இதனால் பீதியடைந்த அந்த பெண் ஏ.டி.எம்.- இல் இருந்து எடுத்த பணத்தை கொடுத்த போது, அந்த கொள்ளையன் பெண் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.

இது குறித்து அந்த பெண்அளித்த புகாரின் பேரில் காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம்., மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

புகார் அளித்த பெண் யார் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+