For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளின் வருமானம் எப்படி டபுள் ஆகும்... தப்புக் கணக்கா பாருங்க... மன்மோகன் சிங் சாடல்

பட்ஜெட் 2018: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது எப்படி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

    டெல்லி: விவசாயிகளின் வருமானம் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகிவிடும் என்று மோடி தலைமையிலான அரசு எப்படி கூறுகிறது. நிதி தொடர்பான கணக்குகளில் ஏதும் தவறு நடந்திருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

    பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் உள்ள நிறை , குறை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Union Budget 2018: How the farmer's income be doubled, asks Manmohan Singh

    இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் வரும் 2020-இல் இரட்டிப்பாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் மீது அதிக கவனம் கொண்டு தயாரிக்கப்பட்டது போல் உள்ளது இந்த பட்ஜெட்.

    இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், தேர்தலை கருத்தில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிதி கணக்கில் ஏதேனும் தவறு இருக்கலாம்.

    விவசாய பாதிப்பை சமாளிக்க எந்த மாதிரியான யுத்தி கையாளப்படுகிறது. விவசாயிகளுக்கான வருமானம் எப்படி இரட்டிப்பாகும். இந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும் என்று மன்மோகன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Arun Jaitley presents Union Budget after GST for first time. Manmohan Singh asks how the farmer's income be doubled?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X