அமைச்சரவை மாற்றம்: ஸ்மிருதி இரானியிடமிருந்த துறை குறைப்பு.. பியூஷ் கோயலுக்கு கூடுதலாக நிதித்துறை
மத்திய அமைச்சரவை திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பியுஷ் கோயல் நிதித் துறையை கூடுதலாக கவனிப்பார். ஸ்மிருதி இரானியிடம் இருந்த துறை பறிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நிதித் துறை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானியிடம் இருந்த செய்தி, ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 மே மாதம் பொறுப்பேற்றது. 2014 நவம்பர், 2016 ஜூலை மற்றும் 2017 செப்டம்பரில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 2017 ஜூலையில் அமைச்சரவையில் துறைகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஐந்தாவது முறையாக மத்திய அமைச்சரவையில் இன்று இரவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால், அவர் பணிக்கு திரும்பும்வரை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் நிதித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்த செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை பறிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக உள்ள ராஜ்யவர்தன் ரதோட் செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் துறை இணையமைச்சராக இருந்த எஸ் எஸ் அலுவாலியா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை அந்த துறையை கவனித்து வந்த அல்போன்ஸ் கன்னன்தனம், சுற்றுலா துறை இணையமைச்சராக தொடருவார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications