அமெரிக்க பாணியில் மாறுகிறது காக்கி சட்டை.. அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே மாதிரி யூனிபார்ம்
டெல்லி: மாநிலங்களிடையே காவல்துறையினரின் யூனிபார்ம் டிசைன் மாறுபாடுடன் உள்ள நிலையில், நாடு முழுக்க ஒரே மாதிரியிலான சீருடையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகள் உள்ளன. வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பதே இந்திய மக்களின் சிறப்பு இயல்பு.
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, வேற்றுமையை குறைத்து, பல்வேறு தன்மைகளை பொதுமைப்படுத்தும் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மூலம் தேச ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

பொதுமை ஒரு தொடர்கதை
ஹிந்தியை பொதுமைப்படுத்தி மக்களை இணைப்பது, இந்து மதத்தை முன்னிறுத்தி மக்களை இணைப்பது போன்ற செயல்களில் அரசு ஈடுபட தொடங்கியது. ஆனால், இணைப்புக்கு பதிலாக துவேஷம் அதிகரிக்க தொடங்கியதால் அவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

யூனிபார்ம் ஆராய்ச்சி
இதேபோன்ற ஒரு பொதுமையை காவல்துறை விஷயத்திலும் கொண்டு வர உள்ளது மத்திய அரசு. மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இது குறித்து ரூ.45 லட்சம் செலவில் ஆய்வு நடத்தப்பட்டது.

புது சீருடை
இந்த ஆய்வு முடிவுப்படி, நாடு முழுவதிலும் அனைத்து மாநில போலீசாருக்கும் ஒரே மாதிரியான சீருடை அணிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேண்ட் வண்ணம், திக்கான பிரவுன் கலரிலும், சட்டை க்ரீம் கலரிலும் இருக்கும்படியாக இந்த யூனிபார்ம் தயாரிக்கப்பட உள்ளது. போலீசாரின் தொப்பியும் க்ரீம் கலரில் இருக்கும். சட்டையின் இரு புறங்களிலும் பேட்ஜ் இடம் பெற்று, அதில் "இந்தியன் போலீஸ்" என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்க பாணி
அமெரிக்காவில் போலீசாருக்கு இதே போன்றுதான் சீருடை வழங்கப்படுகிறது. அந்த சீருடையிலிருந்து சில மாற்றங்கள் செய்து, மெருகேற்றி, இந்திய போலீசாருக்கு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கருத்து
இந்த புதிய சீருடை பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி கருத்து கேட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள பதிய சீருடையில் வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்றும் மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கிய பிறகே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications