நாட்டு பாதுகாப்பை போல, நிதி பாதுகாப்பு அவசியம்.. வங்கிகள் கான்க்ளேவில் மத்திய அமைச்சர் பேச்சு
டெல்லி: பொருளாதார பாதுகாப்பு மிக அவசியம் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
பொருளாதார கொள்கை ஆய்வுக்கான மையம், நிதி ஆயோக் ஆகியவை இணைந்து, டெல்லியில், இன்றும், நாளையும் இந்திய வங்கி கான்க்ளேவ்க்கு (IBC) ஏற்பாடு செய்துள்ளன. வங்கி துறை சார்ந்த விவகாரங்களில் இதில் விவாதிக்கப்படுகிறது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் பொதுச் செயலாளர் சுனில் அம்பேகர் (Sunil Ambekar), நிகழ்ச்சியில் பேசுகையில், "மக்களின் எதிர்பார்ப்புகளோடு சேர்ந்து நமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகிறது. மக்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை நான் அறிந்துள்ளேன். ஐஐடி மற்றும் என்ஐடி மாணவர்கள் பலருடன் கலந்து பேசி விட்டுத்தான் நிகழ்ச்சிக்கு வந்தேன். அதை வைத்து பார்க்கும் போது மக்களின் எதிர்பார்ப்பு என்பது மிக அதிகமாக உள்ளது புலப்படுகிறது
வரலாறு படிக்கும் மாணவர்கள் கூட சுற்றுலா குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். பாலிவுட் அமைப்புசாரா துறையாக இருந்து வருகிறது. இதில் வங்கிகள் முக்கிய பங்காற்ற முடியும். தயாரிப்பு மற்றும் சேவைத் துறையை மட்டும் சாராமல் இது, சுமார் 30 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய துறையாக உள்ளது. அனைத்து தரப்பு பங்களிப்பு இல்லாமல் அதனால் வளர முடியாது.
சர்வதேச அமைப்புகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்திய ஊரகப் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். வருங்காலங்களில் இந்திய ஊரகப் பகுதிகள் நாட்டுக்கான மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஜன் தன் யோஜனா, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவியுள்ளன.
கார்பொரேட், தனியார், கூட்டுறவு, சுய உதவி குழுக்கள் போன்றவை நாட்டுக்கு மிக அவசியம். அனைத்துமே ஒருங்கிணைந்து செல்ல வேண்டிய அவசிய தேவை இப்போது எழுந்துள்ளது. எந்த ஒரு வகையான வங்கியும் நமக்கு முக்கியம். பல்கலைக்கழகங்களிலும் கல்வி நிலையங்களிலும் வங்கியியல் சரியாக கற்றுத் தரப்படுவது இல்லை.
வங்கியியல் தொடர்பான பாடங்களை விரிவாகக் கற்றுத் தரும் அளவுக்கு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. வெறுமனே கார்பொரேட் வங்கிகளை மட்டுமே பல்கலைக்கழகங்கள் கற்றுத் தருகின்றன. பிறவகை வங்கிகள் குறித்தும் பாடங்கள் அவசியம். இவர் அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: தேசிய பாதுகாப்பு போலவே, நிதி பாதுகாப்பு மிக அவசியம். நாம் ஒரு பெருமை மிகுந்த குடிமகனாக நிதி பாதுகாப்பு இல்லாமல் அறிவித்துக் கொள்ள முடியாது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது துவங்கிய வங்கி கணக்கில் எனக்கு பி 19 என்ற எண் கணக்கு எண்ணாக வழங்கப்பட்டது. அதாவது எந்த அளவுக்கு அதிகமான மக்கள் வங்கித்துறையில் இருந்து விலகி இருந்தனர் என்பதற்கு இது ஒரு உதாரணம். உலக அளவிலான டாப் 100 வங்கிகளில், இந்தியாவிலிருந்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை தவிர வேறு எந்த வங்கியும் கிடையாது.
சீனாவின் 2 வங்கிகள் உலக வங்கியை விட அதிகமாக கடன் வழங்குகின்றன. நாம் இப்பொழுது 32 கோடி வங்கிக் கணக்குகளை தாண்டிவிட்டோம். இன்னமும் கூட சாமானியர்களுக்கு வங்கி சென்று சேராததன் காரணம்தான் என்ன?
ஆபத்துக் காலத்தில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். நாடு எதிர்கொள்ளும் நோயைத் தீர்க்க அதை ஆரோக்கிய பாதைக்கு கொண்டு செல்ல ஆபரேஷன்களும் அவசியம். இதுபோன்ற நடவடிக்கையின் போது சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஜிஎஸ்டி என்பது அவசியம். சிலருக்கு அது அசவுகரியமாக தென்பட்டாலும், நாட்டுக்கு அது அவசியத் தேவை. அரசின் நலத்திட்ட உதவிகள் தோல்வியடையாமல் பார்த்துக்கொள்ள வங்கிகள் பங்களிப்பு அவசியம். இவ்வாறு தெரிவித்தார்












Click it and Unblock the Notifications