Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனுமதியின்றி மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு குற்றமல்ல: கோர்ட் தீர்ப்பு.. அந்த பெண்ணுக்கு என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: இயற்கைக்கு மாறான உறவு குறித்த வழக்குகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், வழக்கு ஒன்றில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது, பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளதுடன், விவாதப்பொருளாகவும் வெடித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய கணவன், இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்துவதாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதையடுத்து, "மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல" என்ற நீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியிருந்தது.

Chhattisgarh Unnatural sex

வன்கொடுமை குற்றங்கள்

அதுமட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை குற்றமல்ல. ஆகவே திருமணம் செய்து கொண்ட இருவர் பாலியல் உறவுகொள்ள பெண்ணின் சம்மதம் முக்கியம் என்ற கருத்து பொருளற்றதாகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பானது, திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றிலும், மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இயற்கைக்கு மாறான உறவு

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இயற்கைக்கு மாறான உடலுறவால் பெரிட்டோனிடிஸ், மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டார்.. இதனால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இதில் விசாரணைக்கு பிறகு, "இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட பாதிப்பால்தான் அவர் உயிரிழந்தார்" என்று குறிப்பிட்ட விசாரணை நீதிமன்றம், உயிரிழந்த பெண்ணின் கணவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. அத்துடன், கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிலாஸ்பூரில் உள்ள ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

பாலியல் வன்கொடுமை ஆகாது

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், "2013-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 315-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் செய்கை குற்றமாக கருதமுடியாது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன், கணவர் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும், பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது.

அதுமட்டுமல்ல, இயற்கைக்கு மாறான உடலுறவு கொலைக்கு சமமானதல்ல. சம்மதம் முக்கியமில்லை. மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், எந்த உடலுறவையும், எந்த சூழ்நிலையிலும் கணவரின் பாலியல் தொல்லை என்று சொல்ல முடியாது. அதனால், இயற்கைக்கு மாறான உறவுக்கு மனைவியின் ஒப்புதல் இல்லாதது முக்கியத்துவத்தை இழக்கிறது.

எனவே, இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனையின் வரம்பிலிருந்து விலக்கப்படுகிறது... எனவே குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பத்திய உறவு

நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. "திருமணம் என்ற கட்டமைப்பை பாதுகாப்பது அவசியம் என்பதால், திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை" என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல என்ற நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது பேசுபொருளாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+