அகிலேஷ் யாதவ் பலவீனமாகக் கூடாது.. - உத்தரப்பிரதேசத்தில் 'பெரிய ப்ளான்' போடும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: சமாஜ்வாதி கட்சி எந்த இடத்திலும் பலவீனமாகிவிடக்கூடாது என்றே திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி முதற்கட்டத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மம்தா பானர்ஜி
உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. அப்போது, "பெரிய ஆர்வத்தில்" அந்த மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை என திரிணாமுல் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

சமாஜ்வாதி
அப்போது, ''உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எந்த இடத்திலும் பலவீனமடைவதை நான் விரும்பாததால், திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை. முதல் கட்டத்தில், அகிலேஷ் கட்சி 57 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வாரணாசி
மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து மீண்டும் உத்தரப்பிரதேசம் செல்கிறார் மம்தா.
வாரணாசியில் வரும் மார்ச் 3ம் தேதி பேரணியில் கலந்து கொள்வதற்காக உ.பி.க்கு செல்கிறார் மம்தா. இந்திய அளவில் தன்னை ஒரு பெரும் தலைவராக காட்டிக்கொள்ளவே மேற்கு வங்கம் தாண்டி மம்தா பிரசாரம் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ்
''காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளை கூட்டணி வைக்க கேட்டுக்கொண்டேன். அவர்கள் கேட்கவில்லை. காங்கிரஸ் அதன் வழியில் செல்லலாம், நாங்கள் எங்கள் வழியில் செல்வோம். பாஜக தலைமையிலான மத்திய அரசால் நாட்டின் அரசியலமைப்பு இடிக்கப்பட்டுவிட்டது'' என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆருடனும் பேசியதாகவும், "கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்" என்றும் கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications