"ப்ளீஸ்.. பிரதமர் மோடியிடம் இதை சேர்த்துடுங்க".. 18 பக்கம் லெட்டர் எழுதிவிட்டு.. தற்கொலை செய்த மாணவி
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்டார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு 18 பக்கம் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தையும், அதிர்ச்சியையும், கவலையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த இந்தியாவே மூழ்கி கிடந்தது.. அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் அன்றைய தினம் இரவு, 16 வயது பெண், துப்பாக்கியை எடுத்து சுட்டு கொண்டார்.
பப்ராலா என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் இந்த சிறுமி படித்து வந்தார்.. இந்நிலையில்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. முன்னதாக இவர் பிரதமர் மோடிக்கு 18 பக்கத்துக்கு ஒரு நோட்டு புத்தகத்தில் லெட்டரை எழுதி வைத்துள்ளார். அதில் நிறைய கோரிக்கைகளையும், விருப்பத்தையும் தெரியப்படுத்தி உள்ளார்.

ஊழல் விவகாரம்
சுற்றுச்சூழல் மாசுபாடு, ஊழல் விவகாரம், மரங்களை வெட்டுவது குறித்தெல்லாம் கவலை தெரிவித்துள்ளார்.. இந்த நாட்டில் எப்படியாவது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதியோர்கள்
அதுமட்டுமல்ல, வயசானவர்களை பற்றி அதிகமாக கவலையையும், அக்கறையையும் வெளிப்படுத்தி உள்ளார்.. முதியவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.. அவங்க பிள்ளைகளே இவர்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.. இதனால் அவர்களுக்கு கடைசி காலத்தில் எந்த ஆறுதலும் கிடைப்பதில்லை.. மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் சிந்துகிறார்கள்... குழந்தைகள் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் இடத்தில் நான் இனி வாழ விரும்பவில்லை" என்று எழுதியுள்ளார்.

லெட்டர்
இந்த இவ்வளவும் எழுதிவிட்டு, இதெல்லாம் என் கடைசி ஆசை.. இந்த லெட்டரை பிரதமரிடம் சேர்த்துவிடுங்கள் என்று தன் பெற்றோருக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்து கடிதத்தை முடித்துள்ளார் சிறுமி. சிறுமியின் அப்பா ஒரு ஏழை விவசாயியாம்.. மகளின் கடைசி ஆசைப்படி, அந்த கடிதத்தை எப்படியாவது பிரதமரிடம் சேர்த்துவிடுவோம் என்று கண்ணீருடன் சொல்கிறார்கள்.
Recommended Video

ஆச்சரியம், அதிர்ச்சி
இந்த சம்பவம் நமக்கு அதிர்ச்சியையும் அதேசமயம், 16 வயசு சிறுமிக்கு இவ்வளவு ஆதங்கமா? இவ்வளவு சமூக அக்கறையா என்பது ஆச்சரியமாகவும் உள்ளது.. இவரது மென்மை மனம் இந்த ஒரு லெட்டரிலேயே வெளிப்படுகிறது.. இந்த பெண் நன்றாக படித்திருந்தால், நல்ல பொறுப்பில் இருந்திருந்தால், நிச்சயம் இந்த நாடு சில நல்லவைகளை பெற்றிருக்கும்.. 16 வயசு பெண்ணின் இந்த தற்கொலையானது, ஏனோ நம் நெஞ்சை பிசைந்தெடுக்கிறது!
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications