நாட்டின் கலாச்சார மையமாக மாறும் அயோத்தி! வேற லெவலில் வளர்ச்சி.. அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரத்தை வரலாற்று சிறப்பு மிக்க நகரமாக மாற்ற யோகி ஆதித்யநாத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் திறக்கப்பட்ட இருக்கிறது. இந்நிலையில், அயோத்தி நகரத்தை இதுவரை இல்லாத சிறப்பு மிக்க நகரமாக மாற்ற மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அம்மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, "அயோத்தி முழுக்க முழுக்க சூரிய மின் சக்தியில் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான மின்சார ஆதாரத்தை நம்பி இல்லாமல் சுயமாக மின் உற்பத்தி இம்மாநிலத்தில் செய்யப்படும்.

பூமியின் அமராவதி என்றும் புனிதமான சப்தபுரி என்றும் அழைக்கப்படும் அயோத்தி நகர் புராணங்களில் புகழ்பெற்றிருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வந்ததிலிருந்து ஏராளமான நலத்திட்டங்கள் அயோத்திக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 2017ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வந்த பின்னர் அயோத்திக்கான வளர்ச்சி தீவிரமடைந்திருக்கிறது. அயோத்தியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உயர்த்த சுமார் ரூ.30,500 கோடி மதிப்பில் சுமார் 178 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் எதிர்பார்த்த பலனை இது கொடுத்திருக்கிறது.
அயோத்தியை மறு கட்டமைப்பு செய்வதில் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்களை யோகி ஆதித்யநாத் வெளியிட்டிருக்கிறார். அதாவது புதியதாக உருவாகும் அயோத்தி, கலாச்சார பண்பாட்டு பின்புலம் கொண்டதாக இருக்க வேண்டும். திறமையான ஊழியர்களுடனும், நவீன கட்டமைப்புடனும், அழகுடனும், உணர்ச்சிமிக்கதாகவும், சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அயோத்தி இருக்க வேண்டும். தேசத்தின் கலாச்சார மையமாக அயோத்தியை மாற்றுவதே இலக்கு" என்று கூறியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications