தேசிய கீதத்தை பாதியில் நிறுத்த உத்தரவிட்ட உ.பி. ஆளுநர் ராம்நாயக்.... வெடிக்கிறது புது சர்ச்சை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்ற நிகழ்ச்சியின் போது தேசிய கீதத்தை ஆளுநர் ராம்நாயக் பாதியில் நிறுத்த உத்தரவிட்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளார். இன்று புதியதாக 12 அமைச்சர்களை தமது அமைச்சரவையில் அவர் சேர்த்துக் கொண்டார். இந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் பதவியேற்று முடித்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் ராம்நாயக் திடீரென கைகளை உயர்த்தி தேசிய கீதத்தை உடனே நிறுத்துமாறு சைகை காட்டினார்.
அதாவது வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி உறுதி மொழி ஏற்பதற்காக அவர் தேசிய கீதத்தை நிறுத்துமாறு கூற முயற்சித்தார். அதற்குள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிவடைந்தும் விட்டது.
இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. உ.பி ஆளுநர் ராம்நாயக்கின் செயல் நியாயப்படுத்த முடியாத ஒன்று; கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் சாடியுள்ளது.
ஆனால் உஷாராகிக் கொண்ட ஆளுநர் மாளிகையோ, ஏதோ ஒரு சிறு குழப்பத்தால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது; தேசிய கீதத்தை அவமதிக்கும் அல்லது இடையூறு செய்யும் நோக்கம் எதுவுமே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications