ஆன்லைனில் கிளிக் செய்தால் பணம்...6 லட்சம் பேரிடம் ரூ.3700 கோடி சுருட்டிய கும்பல் கைது
ஆன் லைன் மூலம் நூதன முறையில் மோசடி செய்து ரூ.3700 கோடி சுருட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொய்டா: ஆன்லைனில் கிளிக் மற்றும் லைக் செய்தால் பணம் என்ற பெயரில் ஏராளமானோரை ஏமாற்றி 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பேரை உத்தரப்பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர்.
நொய்டாவில் அப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை துவக்கிய அனுபவ் மிட்டல் என்ற பிடெக் பட்டதாரி, இணையதளம் ஒன்றை துவக்கி, உறுப்பினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால், ஒவ்வொரு கிளிக்கிற்கும் ரூ.5 கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதை நம்பி சுமார் 6 லட்சம் பேர் இணைந்தனர். இதற்காக ரூ. 5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் நிறுவனம் கூறியதுபோல் யாருக்கும் பணம் கிடைக்கவில்லை.
இணைய தளத்தின் பெயரும் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, 6 லட்சம் பேரிடம் பணம் பெற்று சுமார் ரூ.3,700 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்
இந்த ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக அனுபவ் மிட்டல், ஸ்ரீதர் பிரசாத், மகேஷ் தயாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரிடமிருந்தும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ள போலீஸார், வங்கிக் கணக்கிலிருந்த தொகை 500 கோடி ரூபாயையும் முடக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications