உ.பி.: பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படம் காண்பித்த துவக்கப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கிருஷ்ணாநகரில் உள்ளது டக்சிலா பள்ளி. அந்த பள்ளியில் வேலை பார்த்து வந்து ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோர் பள்ளியில் ஒரு அறையில் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 மாணவிகள் அதை பார்த்துவிட்டு ஓட்டம்பிடித்தனர். மேலும் பிறரிடம் இது குறித்து தெரிவித்தனர். இந்த விஷயம் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. ஆபாச படம் பார்த்த செல்போன் ஆசிரியையுடையது.

இதற்கிடையே மாணவர்கள் அவர்களை அறையில் வைத்து பூட்டினர். அப்படி இருந்தும் ஆசிரியை தப்பியோடிவிட்டார். அந்த ஆசிரியரும், ஆசிரியையும் தங்களுக்கு ஆபாச படம் காட்டியதாக 4ம் வகுப்பு மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர் கிருஷ்ணா நகர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.
அந்த ஆசிரியையை தலைமை ஆசிரியை ஊர்மிளா ஷர்மா முன்னிலையில் போலீசார் விசாரித்தனர். ஆனால் அதற்குள் அந்த ஆசிரியை தனது போனில் இருந்த ஆபாச படங்களை அழித்துவிட்டார்.
பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications