பாஜகவின் படுபயங்கரமான சாதனை... உ.பி.-யில் 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 58%

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை 58% அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டசபையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா அளித்த பதில்:

UP Unemployment rises by 58% in two years

நடப்பாண்டு பிப்ரவரி 7-ந் தேதி வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 33.93 லட்சம். 2018-ம் ஆண்டு ஜனவரி 30-ல் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 21.39 லட்சம்பேர்.

2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 58% அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் சுவாமி பிரசாத் மெளரியா கூறினார். ஆனால் வேலைவாய்ப்பு இல்லாததற்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உ.பி. மக்கள் தொகை சுமார் 20 கோடி. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 16% . இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணக்கின் படி 2018-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2019-ல் உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

அதாவது 2018-ல் வேலைவாய்ப்பின்மை விகிதம் என்பது 5.91% ஆக இருந்தது; 2019-ல் இது 9.95% ஆக உயர்ந்துள்ளது. அதாவது உத்தரப்பிரதேசத்தில் 100-ல் 10 பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் என்கிறது இப்புள்ளி விவரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+