மருமகனுடன் ஓடிப்போன மாமியார்.. அது போன வாரம்.. மகளின் மாமனாருடன் ஓடிப்போன பெண்.. இது இந்த வாரம்
கான்பூர்: உறவுகள் என்பது ஒரு மெல்லிய நூலை போன்றது...அது ஒருமுறை அறுந்துவிட்டால் மீண்டும் இணைப்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.. அதிலும், ஆண்-பெண்ணுக்கு இடையேயான உறவைப் பேணி பராமரிப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.. இதில் உறவு சிக்கல்களும் இணைந்துவிட்டால், குடும்பத்தின் நிம்மதியே மொத்தமாக போய்விடும். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது நாட்டில் மலிந்து வருகின்றன. அதிலும் உத்தரபிரதேசத்தில் அடிக்கடி நடந்து வருவதையெல்லாம் பார்த்தால், பொதுமக்களுக்கு அதிர்ச்சிதான் மேலிடுகிறது.
எந்தவொரு குடும்பத்திலும் மாமியார் - மருமகள் உறவு வலுவாக அமைந்துவிட்டாலே, அந்த குடும்பமே ஆரோக்கியமான தழைத்து வளரும். மாமியார் மருமகள் இருவருமே, தாயும், மகளையும் போல அல்லது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் உற்ற தோழிகளாக இருந்துவிட்டால், அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.

அழகான உறவு - அன்பான குடும்பம்
இதுபோலவே, மாமியார் - மருமகன் உறவும்.. இன்னொரு தாயாக மாமியாரை பாவிக்கும் மருமகன்கள் கிடைப்பதும், இன்னொரு மகனாக மருமகனை அரவணைக்கும் மாமியார் கிடைப்பதும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.
ஆனால, சில சமயங்களில் விபரீத ஆசைகளால் உறவு சிக்கல்கள் எழுந்துவிடுகின்றன.. இது நாளடைவில் குடும்ப வன்முறைகளை ஏற்படுத்தி, உயிர்களையும் பறிக்கும் நிலைமைக்கு சென்றுவிடுகிறது.. இதுபோன்ற விநோதங்கள் எல்லாம் வடமாநிலங்களில் அதிகரித்து காணப்படுவது வழக்கமாகும். அதிலும் உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
கண்ணீர் விட்ட அனிதா
கடந்த வாரம், அலிகார் பகுதியிலுள்ள மனோகர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜிதேந்திர குமார், தன்னுடைய மகள் ஷிவானிக்கு, ராகுல் என்ற மாப்பிள்ளையை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்திருந்தார். 2 நாட்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்திருக்க வேண்டியது. ஆனால், ஜிதேந்திர குமார் மனைவி அனிதா, தனக்கு மருமகனாக வரப்போகும் ராகுலுடன் வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டார்.
10 நாள் கழித்து இவர்களை போலீசார் கண்டுபிடித்தனர்.. போலீசாரிடம் அனிதா சொல்லும்போது, என் கணவருக்கு சொந்த வீடு கூட கிடையாது.. என்னையும் மருமகனையும் தொடர்புபடுத்தி, மோசமான குற்றச்சாட்டுகளை சொல்லி கொண்டேயிருந்தார்.. அதனால்தான் அவர் சொன்னபடியே செய்துவிட்டேன்..விவாகரத்து பெறாவிட்டாலும்கூட, நான் ராகுலுடன் வாழவே விரும்புகிறேன். அவர் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று அழுதுகொண்டே சொன்னார்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் போலீசார் விழித்தனர்.
மம்தாவுக்கு 4 பிள்ளைகள்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு பரபரப்பு இதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. பாடன் மாவட்டத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மம்தா.. 43 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இவர்களுடைய மூத்த மகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு , சைலேந்திரா (46) என்பவரின் மகனுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சம்மந்தி சைலேந்திராவுக்கு மம்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.. இதுவே இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது.
வீட்டுக்கு வந்த சம்மந்தி
தன்னுடைய கணவர் சுனில் குமார் வீட்டில் இல்லாதபோது, சம்மந்தியை வீட்டுக்கு வரவழைப்பாராம் மம்தா.. தன்னுடைய பிள்ளைகளை வேறு அறையில் தங்க வைத்துவிட்டு, சம்மந்தியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.. கடந்த 3 வருடமாகவே இப்படியொரு அசிங்கம் அந்த வீட்டில் நடந்து வந்தநிலையில், இப்போது மம்தா, தன்னுடைய சம்மந்தியுடன் வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டாராம். வீட்டில் மனைவியை காணாமல் அதிர்ச்சியடைந்த சுனில் குமார், போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும்,
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... பெற்றோர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால், தாங்கள் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுவிடுகிறது.. இப்போது சம்மந்தியுடன் ஓடிப்போய், கணவர் சுனில்குமார் தலையில் இடியை இறக்கியிருக்கிறார் மம்தா...!!!












Click it and Unblock the Notifications