ஓடிப் போய்ரலாம்.. அழைத்தும் வராத கள்ளக்காதலனை சரமாரியாக செருப்பால் அடித்த பெண்!
கான்பூர்: வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம் என்று கள்ளக்காதலனைக் கூப்பிட்டபோது அவர் வரமறுத்ததால் ஆவேசம் அடைந்த பெண், பொது இடம் என்று கூட பாராமல் அந்த நபரை சரமாரியாக செருப்பால் அடித்துத் துவைத்து விட்டார். இந்த சம்பவத்தின்போது அங்கு போலீஸார் இருந்தும் கூட அப்பெண்ணை யாரும் தடுக்கவில்லை.
கான்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடி வாங்கிய நபரின் பெயர் பல்ஜீத். 30 வயதான இவருக்கும்,3 குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இருவரும் இருவரது வீட்டுக்கும் தெரியாமல் ரகசிய உறவை பேணி வந்தனர். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்கலாம் என அந்தப் பெண் அழைத்தார். அதற்கு பல்ஜீத்தும் ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்தனர். ஆனால் திடீரென பல்ஜீத் நான் வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்தார் அப்பெண். தனது காலில் கிடந்த செருப்பை எடுத்து பல்ஜீத்தை சரமாரியாக அடித்துத் துவைத்தார். அந்த இடமே போர்க்களமாக மாறி விட்டது. அங்கு இருந்த போலீஸாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
தகவல் அறிந்து வந்த பெண்ணின் கணவருக்கும் விவரம் தெரியவில்லை. பின்னர் கூட்டம் பெரிதாக கூடியதைப் பார்த்த போலீஸார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வத்து விசாரித்தபோதுதான் விவரம் தெரிய வந்தது. மேலும் தான் அப்பெண்ணுடன் போக விரும்பவில்லை என்று போலீஸாரிடம் பல்ஜீத் கூறியபோது மறுபடியும் அப்பெண் அவரை செருப்பால் அடிக்க ஆரம்பித்தார்.












Click it and Unblock the Notifications