சிவில் சர்வீஸ் தேர்ச்சிக் காரணிகளில் ஆங்கிலம் கிடையாது- மத்திய அரசு
டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 20 மதிப்பெண்ணுக்கான ஆங்கிலப் பகுதி தேர்ந்தெடுக்கும்போது அது கருத்தில் கொள்ளப்படாது என்றும், 2011 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, "சிவில் சர்வீஸ் தேர்வின் இரண்டாம் தாளில் வரும் ஆங்கிலத்தொகுதி வினாக்கள் இனி தேர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளில் சேர்க்கப்படமாட்டாது" என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், "2011 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதியவர்கள் 2015 ஆம் ஆண்டின் மற்றொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக போராட்டங்கள் வெடித்தன. கடந்த சில நாட்களாக லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவிலும் இந்த பிரச்சனையானது தீவிரமடைந்தது. 100க்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் மாணவர்கள் டெல்லி தெருக்களில் மிகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்வையும் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தனர்.
போராட்டக்குழுவினர் முன்வைத்த கோரிக்கைகளில், இந்தி மற்றும் மற்ற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இன்று ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வானது 3 நிலைகளில் நடக்கின்றது. தகுதித்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்பது அம்மூன்று படிநிலைகள் ஆகும். இந்தியக் குடிமைபணிக்கான அதிகாரிகள் இத்தேர்வின் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications