சாரத்தின் மேல் ஏறி செல்ஃபி எடுக்கையில் விபரீதம்: படுத்தபடுக்கையான 2 இளம்பெண்கள்
பனாஜி: கோவாவில் உள்ள கடற்கரை கிராமமான அன்ஜுனாவில் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்த 2 பெண்களின் இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போனது.
இளம் தலைமுறையினர் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறார்கள். பலர் ஆபத்துகளையும் கண்டுகொள்ளாமல் உயரமான கட்டிடங்கள், கால்வாய்கள், அணைகளில் ஏறி செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி செல்ஃபி எடுக்கையில் சிலர் கால் தவறி விழுந்து பலியாகின்றனர்.

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரை கிராமமான அன்ஜுனாவுக்கு 20களில் இருக்கும் இரண்டு இளம் பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுத்தனர்.
செல்ஃபி எடுக்கையில் அவர்கள் இருவரும் கால் தவறி சாரத்தில் இருந்து தரையில் விழுந்தனர். இதில் இருவருக்கும் முதுகு எலும்பில் பலமான அடிபட்டது. இருவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த 2 பெண்களின் முதுகு எலும்பிலும் பலத்த அடி பட்டுள்ளதால் அவர்களின் இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்கள் இனி வேலை செய்யாது என்று தெரிவித்துள்ளனர்.
அந்த 2 பெண்களின் விபரங்களை வெளியிட மருத்துவமனை மறுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்படவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications