இன்னும் ஓராண்டுக்கு காஷ்மீர் செல்ல வேண்டாம்! அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா பிறப்பித்திருந்த அறிவுரையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவே பல நாடுகளில் இருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவுக்கு வருகை தருவார்கள்.

காஷ்மீரில் பதற்றம்
ஆனால் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் நாட்டின் அத்துமீறிய துப்பாக்கி சூடுகளாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.

அமெரிக்கா அதிரடி
இதன்காரணமாக தங்கள் நாட்டு சுற்றுலா பயணிகளை காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தல் வெளியிட்டிருந்தது. மோடி அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிலைமை சீரடையும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா மீண்டும் தனது அறிவுறுத்தலை ஓராண்டுக்கு நீட்டியுள்ளது.

சுற்றுலாவில் பாதிப்பு
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அமெரிக்கா இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது. அதே நேரம், அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தல், பள்ளத்தாக்கு மாநிலத்தின் சுற்றுலாவை வெகுவாக பாதிக்கும் என்று கூறியுள்ளார், காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆலோசகர், தன்வீர் சாதிக்.

வீரர்களின் வாசஸ்தலம்
இமயமலை சாரலில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 1.3 மில்லியன் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிக போர்வீரர்கள் குவிக்கப்பட்ட மலை வாசஸ்தலம் என்ற ஒரு பெயரும் காஷ்மீருக்கு உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications