சுச்சின்.. சீவாலா.. மேடையிலேயே குழம்பிய டிரம்ப்.. ஷாக்கான கூட்டம்.. என்ன இப்படி சொல்லிட்டாரே!
நமஸ்தே டிரம்ப் விழாவில் இன்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சில வார்த்தைகளை தவறாக உச்சரித்தது பெரிய வைரலாகி உள்ளது.
அகமதாபாத்: நமஸ்தே டிரம்ப் விழாவில் இன்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சில வார்த்தைகளை தவறாக உச்சரித்தது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
நமஸ்தே டிரம்ப் விழா மிகவும் பிரம்மாண்டமாக இன்று காலை நடந்து முடிந்தது. இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார்.
அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார். இந்தியா குறித்தும், பிரதமர் மோடி உடனான அவரின் நட்பு குறித்தும் டிரம்ப் பேசினார்.

என்ன சொன்னார்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒரு காலத்தில் ''சீவாலாவாக'' இருந்தார் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். ''சாய்வாலா'' என்பதை சொல்ல முயன்றுதான் ''சீவாலா'' என்று குறிப்பிட்டார். அதேபோல் பிரதமர் மோடி ஒரு காபிடேரியாவில் பணியாற்றினார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். இவர் இந்த சொல்லை பயன்படுத்திய போது அங்கு இருந்தவர்கள் பலர் இவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் குழம்பினார்கள்

சச்சின் டெண்டுல்கர்
அதேபோல் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரை டிரம்ப் 'சுச்சின் டெண்டுல்கர்'' என்று குறிப்பிட்டார். அதேபோல் மிகவும் பிரபலமான படமான ''ஷோலே'' என்பதை குறிப்பிட ''ஷோஜே'' என்று குறிப்பிட்டார். அதேபோல் வேதாஸ் என்று சொல்வதற்கு பதிலாக, வேஸ்டாஸ் என்று குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தர் என்று சொல்வதற்கு பதில் ''விவேகமானான்'' என்று குறிப்பிட்டார்.

என்ன தவறு
அவர் இப்படி அடுத்தடுத்து தவறு செய்தது சிலரை சிரிக்க வைத்தது. இன்னும் சிலர் அவருக்கு இதெல்லாம் தெரியாது. அவர் கஷ்டப்பட்டு இந்தியர்களை கவர வேண்டும் என்று பேசுகிறார். அவரை கிண்டல் செய்ய கூடாது என்று கருத்து தெரிவித்தனர் .அதேபோல் இந்த பிரதமர் மோடியும் இதில் சில விஷயங்களை தவறாக குறிப்பிட்டார்.

டோலன்ட் டிரம்ப்
அதன்படி, அவர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ''டோலன்ட் டிரம்ப்'' என்று குறிப்பிட்டார். இந்த வீடியோவும் இணையம் முழுக்க வெளியாகி உள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் மக்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதாவது டிரம்ப் பேசும் வரை மக்கள் காத்திருக்கலாம் அங்கிருந்து வெளியேறி சென்றார்கள்.












Click it and Unblock the Notifications