அதென்ன ஒரே மாதிரி? பருப்பு சட்டியில் விழுந்த பிரியா! மீன் குழம்பில் மிதந்த குழந்தை! நம்பவே முடியலயே
கான்பூர்: புதுச்சேரியில் சேதராப்பட்டு புதுகாலனி பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவரின் குழந்தை, விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தபோது, அதில் விழுந்து உயிரிழந்தது.. சமைக்கும் இடத்தில், குறிப்பாக, விறகு அடுப்பு வைத்து சமைக்கும் இடத்தில் குழந்தைகளை அண்டவிடாமல் தடுக்க வேண்டும்.. சூடான குழம்பு சட்டியில் தவறி விழுவதன் மூலம் பல உயிர்பலிகள் அநியாயமாக நடக்கின்றன. அந்தவகையில், உத்தரபிரதேசத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 2 வருடங்களுக்கு முன்பு, ஒரு துயர சம்பவம் நடந்தது.. ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்த முருகேசன் - அனுசியா தம்பதியினர் கோவையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.. இவர்களுக்கு 2 வயதில் ரிஷி என்ற ஆண் குழந்தை இருந்தது.

அனுசியா தன்னுடைய வீட்டு வாசலிலேயே பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை வீட்டில் அனுசியா பானிபூரிக்கு குழம்பு தயார் செய்து கொண்டிருந்தார்... குழம்பு ரெடியானதுமே, அடுப்பில் இருந்து பாத்திரத்தை கீழே இறக்கி வைத்திருக்கிறார்.. அப்போது விளையாடிக்கொண்டு ரிஷி, கொதித்துக் கொண்டு இருந்த குழம்பில் தவறி விழுந்துவிட்டான்..
குழம்பில் விழுந்த குழந்தை
இதனால் சூடு தாங்க முடியாமல் குழந்தை அலறி துடித்தான்.. இதில் படுகாயம் அடைந்த ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புளியம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை ரிஷி இறந்துவிட்டான்.. இந்த சம்பவம் கும்பகோணத்தை பெரிதும் உலுக்கியெடுத்திருந்தது.
இதுபோலவே உத்தரபிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள தெரு வியாபாரி ஒருவர் வறுமையான சூழலில் வசித்து வருபவர்.. இவரது மனைவி , வீட்டில் சமைத்து தரும் பானிபூரியை கொண்டுபோய் தெருவில் விற்றுவிட்டு வருவது இவரது பணியாகும்.. இவர்களது 18 மாத பெண் குழந்தையின் பெயர் பிரியா.
கொதிக்கும் பட்டாணி குழம்பு
இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி பானிபூரி தயாரிப்பதற்காக, பட்டாணியை சமைத்து கொண்டிருந்தார்.. அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரியா, திடீரென சமையலறைக்கு சென்றிருக்கிறாள்.. அப்போது எதிர்பாராத விதமாக, பட்டாணி பானையில் விழுந்து, அலறி துடித்துவிட்டாள்.
அந்த சத்தத்தை கேட்டு, அப்பெண் ஓடிவந்து பார்த்தபோது, பானைக்குள் விழுந்த பிரியா வலியால் அலறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. பிறகு உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.. ஆனால் பிரியாவின் உடம்பெல்லாம் பலத்த தீக்காயங்களும், கொப்புளங்களும் ஏற்பட்டுவிட்டன.. இதனால் தீவிரமான சிகிச்சை தந்தும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை..
பருப்பு பாத்திரம் கொடுமை
இதையடுத்து, குழந்தை பிரியாவின் மரணம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்துள்ளனர.. இதனிடையே, மருத்துவமனையிலிருந்து வந்த தகவலின்பேரில், போலீசார் வீட்டிற்கு வந்தபோது, இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நடத்தி முடித்துவிட்டிருந்தனர்.. பிறகு பிரியா இறந்தது எப்படி? என்று விசாரித்து, அது ஒரு விபத்து மரணம் தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்திவிட்டு சென்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால், இதே பெண் 2 வருடங்களுக்கு முன்பு, இப்படித்தான் வீட்டில் பருப்பு சமைத்து கொண்டிருந்தாராம்.. அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை பிரியாவின் அக்கா, அதாவது பெண்ணின் முதல் குழந்தை, அந்த பருப்பு பாத்திரத்தில், தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டதாம்.
இப்போது அதே பாணியில் ஒன்றரை வயது பிரியாவும் கொதிக்கும் குழம்பில் விழுந்து இறந்துள்ளது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications