Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிரவு அறைக்குள் சென்ற மணமக்கள்.. காலையில் கதவையும் திறக்கல, சத்தமும் வரல.. உள்ளே போய் பார்த்தால்?

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: திருமணமான சில மணி நேரங்களில் முதலிரவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை: உத்தரபிரதேசத்தில் நடந்த சோகம் அயோத்தியில் முதலிரவில் மணமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற மணமகன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் உள்ளது கான்ட் என்ற பகுதி.. இங்குள்ள சாதத் கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்.. இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர், அதே பகுதியை சேர்ந்த ஷிவானி என்ற பெண்ணை பேசி முடித்தனர்.

Uttar pradesh newlywed First Night

பிரதீப், ஷிவானியின் சம்மதத்தின் பேரில், கடந்த சனிக்கிழமையன்று, இவர்களுக்கு இரு வீட்டினரும் தடபுடலான திருமணத்தை செய்தார்கள்.. அன்றைய தினம் மணமகனின் வீட்டில், தம்பதிக்கு திருமணத்திற்கு பிந்தைய சடங்குகள் நடந்து முடிந்தன.. அன்று இரவே மணமக்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.. இதையடுத்து, மணமகனும், மணமகளும் தங்களது அறைக்கு சென்றனர்..

அறையிலிருந்து சத்தம் வரவில்லை

ஆனால், மறுநாள் காலை புதுமண தம்பதியினர், தங்களது அறைக்கதவை திறக்கவேயில்லை.. நீண்ட நேரமாக இருவருமே கதவு திறக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள், புதுமணத் தம்பதியினர் படுத்திருந்த ரூம் கதவை தட்டினார்கள்.. ஆனால், பலமுறை தட்டியும் கதவை இருவருமே திறக்கவுமில்லை, ரூமிலிருந்து எந்த பதிலும் வரவும் இல்லை..

இதனால் பயந்துபோன குடும்பத்தினர், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையில் புதுப்பெண் ஷிவானி சடலமாகி கிடந்துள்ளார்.. அங்கிருந்த ஃபேனில், மணமகன் பிரதீப் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. இதைக்கண்டு அலறிய குடும்பத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும், விரைந்து வந்து மணமக்களின் சடலங்களை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பிவைத்துவிட்டு, விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

முதலிரவு அறைக்கதவு திறக்கவில்லை

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் நாயர் சொல்லும்போது, "திருமணமான புதுமணத் தம்பதிகள், அன்றிரவு பழக்கவழக்கத்தின்படி முதலிரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் புதுமணத் தம்பதிக்குள் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அறையின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது.

முதற்கட்ட விசாரணையில், மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து 2 தரப்பு பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

ரிசப்ஷன் அன்றே நடந்த சோகம்

பிரதீப்பின் மூத்த சகோதரர் தீபக் குமார் சொல்லும்போது, "திருமணத்தின்போது எல்லாமே சுமூகமாக நடந்தது.. தம்பதியினர் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்துதான் இரவு உணவு சாப்பிட்டார்கள்.. சாப்பிட்டுவிட்டு ரூமுக்குள் சென்றனர்.. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. மறுநாள் ரிசப்ஷன் என்பதால், அதற்கான காய்கறிகள் வாங்க, காலையில் கிளம்பி சென்றபோதுதான், அறைக்கதவு திறக்காமலேயே இருந்தது சந்தேகத்தை கிளப்பியது" என்றார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டுள்ளார்.. இது ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் என்றும் பதிவிட்டுள்ளார்.. சனிக்கிழமை திருமணம் முடிந்து, நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. ஆனால், அன்றைய தினமே தம்பதி இறந்துகிடந்தது, பெரும் அதிர்ச்சியை தந்துகொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+