பச்சைத் துரோகம்.. இப்படியும் ஒரு பெண்ணா? ஆமா, ஜாலியாக ஊர் சுற்றி வந்த மனைவியின் மூக்கு என்னாச்சு
கான்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஹனிமூன் கொலையின் அதிர்வலையே இன்னமும் நாட்டில் அடங்கவில்லை. இந்த கொலையை போலவே ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்னொரு பெண், தன்னுடைய கணவரை கொலை செய்திருந்தது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்திருந்தது.. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கள்ளக்காதல் சம்பவம் நடந்து, மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கரள்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ளது தியோரியா பிரசித்நகர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கில்வான் என்ற விவசாயி.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. அரியானா மாநிலம் ஷாஹாபாத்தைச் சேர்ந்தவர் இவரது மனைவி.

தம்பதிக்குள் தகராறு
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் மணவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.. ஆனால், நாளடைவில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்தன... இதனால் தகராறுகளும், சண்டைகளும் குடும்பத்தில் அதிகமாகின. இதற்கு மூலகாரணம், மனைவியின் தவறான நடத்தையாகும்.
இந்த மனைவிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருக்கும் நட்பு மலர்ந்துள்ளது.. அந்த நட்பு, தகாத உறவில் கொண்டுபோய் விட்டுள்ளது.. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் இந்த விஷயம், கணவருக்கு தெரியவந்துள்ளது.. எனவே, மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ள நண்பனை, கைவிட மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இரவு நேரம் அதிர்ச்சி
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சம்பவத்தன்று இரவு தன்னுடைய கள்ளக்காதலனை சந்திப்பதற்காக மனைவி சென்றுள்ளார்.. வீட்டிலிருந்து இரவு நேரம் மனைவி வீட்டை விட்டு செல்வதை கணவரும் கவனித்துவிட்டார்.. எனவே, மனைவிக்கு தெரியாமல் அவரையே பின்தொடர்ந்து சென்றார் கணவர்.
கணவர் பின்னால் வருவதை அறியாத மனைவி, தன்னுடைய ஆண் நண்பரின் வீட்டுக்கு சென்று, உல்லாசமாக இருந்துள்ளார்.. இதைக்கண்டு உச்சக்கட்ட ஆவேசமும், ஆத்திரமும் அடைந்த கணவர், அந்த வீட்டிற்குள்ளே நுழைந்து, மனைவியை சரமாரியாக திட்டினார்..
பிறகு உடனே தன்னுடன் வீட்டுக்கு கிளம்பி வருமாறு அழைத்தார்.. ஆனால் அந்த பெண்ணோ கணவரின் பேச்சை கேட்காமல், ஆண் நண்பரின் வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், அந்த ஆண் நண்பரை தாக்க தொடங்கினார்.
கடித்து துப்பி ஓட்டம்
அத்துடன், தன்னுடைய பேச்சை கேட்காத மனைவியையும் தாக்கி, அவரது மூக்கையும் கடித்து துப்பிவிட்டு, உடனடியாக அங்கிருந்து எகிறி தப்பி ஓடிவிட்டார்.
இதனால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.. வலி பொறுக்க முடியாமல் அந்த பெண் கதறி துடித்தார்.. நள்ளிரவில் அலறல் சத்தத்தை கேட்டு, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.. பெண்ணின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூக்கு எங்கே
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு லக்னோவின் பிஜிஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்பெண்ணுக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது... தப்பி ஓடிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த பெண்ணின் மூக்கை மறுபடியும் ஒட்ட வைக்க முடியுமா என்று டாக்டர்களுக்கு தெரியவில்லையாம்.. மூக்கை மறுபடியும் இணைக்க வேண்டுமானால், ஆபரேஷன்தான் செய்ய வேண்டும் என்று கூறி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications