உத்தரகாண்ட் மேகவெடிப்பு.. கனமழை வெள்ளத்தால் 6 பேர் பலி.. நிலச்சரிவில் சிக்கி 11 பேர் மாயம்!
டேராடூன்: உத்தரகாண்ட்டில் நேற்று மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அம்மாநிலத்தின் சமொலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் கனமழை காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 11 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டிய நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பல குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
மேலும், மேக வெடிப்பின் காரணமாக இதுவரை 8 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலருடைய வீட்டு விலங்குகளும் புதைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, மேகவெடிப்பின் தாக்கம் பல இடங்களில் கடுமையாக உள்ளது.
கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த ஒரு பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. ருத்ரபிரயாகையில் உள்ள அனுமன் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. ராணி பாக் பாலத்திற்கு அருகிலுள்ள மலைச்சரிவில் இருந்து பலத்த இடிபாடுகள் விழுந்து வருவதால், ஹல்த்வானி -பீம்தால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமொலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதர் தாலுகா, படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதியில், மேக வெடிப்பு காரணமாக, சில குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் மீட்பு முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன" என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications