ஜெ. உடலுக்கு தேவகவுடா மற்றும் சித்தராமையா, நாராயணசாமி, பினராயி உட்பட ஏராளமான முதல்வர்கள் அஞ்சலி!

ஜெயலலிதா உடலுக்கு சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு ஒருநாள் துக்கத்தை அறிவித்துள்ளது.

Uttarakhand, Karnataka and Bihar declare one-day state mourning for Jayalalithaa

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மபி மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் ஆகியோரும் நேரில் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கேரள ஆளுநர் சதாசிவம், அம்மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களும் ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைபிடிப்பதாக அறிவித்துள்ளன. புதுவையில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

தேவே கவுடா

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+