ராணுவ வீரர்கள் உடல்வாகு பெரியது.. எனவே நானே உள்ளே போனேன்.. சுரங்க மீட்பு குழு நபர் நெகிழ்ச்சி
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் 41 தொழிலாளர்களும் ஓரிரு மணி நேரங்களில் மீட்கப்படவுள்ள நிலையில், சுரங்கப்பாதை குழாய்க்குள் இருந்த தடைகளை உடைத்தது எப்படி என்பது பற்றி விவரித்துள்ளார் பொறியாளர் பிரவீன் யாதவ்.
''தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உட்பட பலர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் போதிய ஆக்சிஜன் இல்லாததால் அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் தான், நான் எனது உதவியாளர் பலிந்தர் யாதவுடன் சுரங்கத்திற்குள் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் முயற்சிப்பதால் அது வரை பொறுமை காக்குமாறு எனது ஓனர் சொன்னார்.''

''தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அனைவரும் திடகாத்திரமான உடல் வாகுடன் இருந்ததால் அவர்களால் சின்னஞ்சிறிய குழாய் வழியாக உள்ளே செல்ல முடியாத நிலை வந்தது. ஒரு கட்டத்தில் நான் களமிறங்குவதற்கான நேரம் வந்தது, கேஸ் கட்டர் மற்றும் 2 தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு எனது உதவியாளர் பலீந்தர் யாதவுடன் குழாய்க்குள் மெது மெதுவாக ஊர்ந்து சென்றேன்.''
''கேஸ் கட்டர்களை கொண்டு உலோக கர்டர்களை வெட்டி எடுத்தேன். அப்போது குழாய்க்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எங்களால் உள்ளே இருக்கவே முடியவில்லை. வியர்வையில் நனைந்துவிட்டோம். அதுமட்டுமல்ல தீக்காயத்தில் சிக்கிவிடுவோமா என்ற அச்சமும் எழுந்தது. மணிக்கணக்கில் இடைவிடாது முன்னெடுத்த முயற்சி என்பது மன வலிமைக்கும் பொறுமைக்கும் நடத்தப்பட்ட சோதனையாக பார்த்தேன்.''
''கேஸ் கட்டரை உபயோகிக்கும் போதெல்லாம் தீ ஜூவாலைகள் முகத்திலும், உடலிலும் பட்டது. பாதுகாப்பு கவசம், கையுறை போன்றவைகள் இருந்ததால் தீக்காயத்திலிருந்து தப்பித்தேன். சுரங்கப் பணிகளில் ஓரளவு முன் அனுபவம் இருந்ததால் ஆபத்துக்களில் சிக்கவில்லை. அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் வந்ததும் நானும் எனது உதவியாளர்களும் 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை இடைவிடாது சுரங்கத்திற்குள் மீட்பு பணியை முன்னெடுத்தோம்.''
''சுரங்கத்திற்குள் சென்று மீட்பு பணிகளுக்கு தடையாக இருந்த உலோக மெட்டீரியல்களை வெட்டி அது குளிர்ந்த பிறகு அகற்றிவிட்டு வெளியே வரும் போதெல்லாம் மக்கள் என்னை பாராட்டினார்கள். குழாயிலிருந்து வெளியே வந்ததும் சொர்க்கம் போல் உணர்ந்தேன். இதற்கு முன் இதேபோல் 4 மீட்பு பணிகளில் ஈடுபட்டு 4 பேர் உயிரை காப்பாற்றியுள்ளேன். ஆனால் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து மீட்பு என்பது மிகக் கடினமான ஆப்ரேஷன்''.
''மீட்புப் பணிகள் முடிவுற்ற பிறகு சுற்றுலா செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னர் அஸ்ஸாமில் 400 மீட்டர் ஆற்றை கடக்கும் ப்ராஜெக்டிற்கு செல்லவுள்ளேன்.' இவ்வாறு பொறியாளர் பிரவீன் யாதவ் விவரித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications