உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங்கின் பழைய அகண்ட பாரதம் ட்வீட்டால் வெடித்தது சர்ச்சை
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி 6 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் பதிவிட்ட அகண்ட பாரதம் வரைபடம் இப்போது சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாதங்களில் 3-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புஷ்கர்சிங் தாமிக்கு எதிராக பாஜகவிலேயே எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதனை பாஜக திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது. இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி. அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் இலங்கை, வங்கதேசம் என பல நாடுகளும் இந்த அகண்டபாரதம் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்போது இந்த பழைய ட்வீட்டை முன்வைத்து இப்படியானவரையா உத்தரகாண்ட் முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்திய வரைபடத்தை முன்வைத்து ட்விட்டர் நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications