"அடுத்தடுத்து பிரச்சனைகள்!" உத்தரகண்ட் சுரங்க விபத்து.. மீட்பு பணிகள் எப்போது முடியும்! பரபர தகவல்
டேராடூன்: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கத் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் போதிலும் அதில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்கியாரா என்ற பகுதியில் சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. கட்டப்பட்டு வந்த அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

கடந்த நவ.12ஆம் தேதி இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்ட நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், அதில் தொடர்ச்சியாகப் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
மீட்புப் பணிகள்: விபத்து நடந்த அன்றே தொடங்கியே மீட்புப் பணிகள் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் அங்கே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சில மணி நேரத்தில் உள்ளே சிக்கியுள்ள ஊழியர்கள் வெளியே வந்துவிடுவார்கள் எனச் சொல்லச் சொல்ல அனைவருக்கும் நம்பிக்கை அதிகரிக்கவே செய்தது. இருப்பினும், மீட்புப் பணிகளில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
எதிர்பாராத தடைகள் ஏற்பட்ட போதிலும், துவண்டு போகாத மீட்புப் படையினர் அடுத்தடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பிளான் ஏ போனால் பிளான் பி அதுவும் ஓர்க் அவுட் ஆகவில்லை என்றால் பிளான் சி என்று விரிவான திட்டத்தை வைத்துள்ளனர். தொழிலாளர்களைக் காப்பாற்றும் முயற்சி மீண்டும் இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் துளையிடும் இயந்திரத்தில் மூன்றாவது முறையாகச் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அது கடந்த வெள்ளிக்கிழமை சுரங்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இயந்திரம்: அப்போது உள்ளே இருந்த ஊழியர்களுக்கும் இந்த மெஷினுக்கும் இடையே வெறும் சில மீட்டர் மட்டுமே இடைவெளி இருந்தது. இருப்பினும், இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதற்கு மேல் இயந்திரத்தால் துளையிடவே முடியாது என்ற நிலை ஏற்பட்ட சூழலில், அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். மலையின் மீது இதுபோல மீட்புப் பணிகள் நடக்கும் போது கணிக்கவே முடியாத விஷயம் கூட நடைபெறும் என்ற மீட்புப் படையினர், துல்லியமாக எப்போது மீட்புப் பணிகள் முடியும் என்பதைக் கூற முடியாது.
சிக்கல்கள்: இந்த மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களில் அது தொடர்ச்சியாகப் பல பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த நவ. 22ஆம் தேதி இரவு ஆகர் இயந்திரம் அடியில் இருந்த இரும்பின் மீது மோதியுள்ளது. இருப்பினும், மறுநாள் காலை 8 மணிக்கு மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
இருப்பினும், ஆகர் இயந்திரம் மறுநாள் மாலை மீண்டும் ஒரு உலோகம் மீது மோதியது. இதையடுத்து இயந்திரத்தின் பிளேடுகளை சரி செய்யப்பட்டு மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இயந்திரத்திற்கு இடையூறாக இருந்த உலோக கர்டர்கள் மற்றும் குழாய்களை அகற்றவே பல மணிநேரங்கள் ஆனது.
மீண்டும் மீண்டும் பிரச்சினை: மறுநாள் நவ.24ஆம் தேதி வெறும் சில மீட்டர் மட்டுமே இருந்த நிலையில், மீண்டும் அடியில் இருந்து உலோகங்கள் மீது இயந்திரம் மோதியது. இதையடுத்து அதை இயந்திரம் மூலம் தோண்டவே முடியாது என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் படையினர் அவர்களே துளையிடும் பணிகளில் இறங்க உள்ளனர். ஆகர் இயந்திரம் அகற்றப்பட்ட உடன், இன்று காலை இந்த பணிகள் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஊழியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர அனைத்து வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், சரியாக அவர்களை மீட்க எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications