டெக்டோனிக் தவறுகள்.. காற்றில் பறக்க விடப்பட்ட விதி.. உத்தரகாண்ட் சுரங்க பணியில் இருந்த குறைபாடுகள்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதை தோண்டும் போது இடிந்து விழுந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சுரங்கம் தோண்டும் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் பணிகளை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம், சில்க்யாரா சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. தொழிலாளர்களை மீட்பதற்காக 'எலி வளை தோண்டும்' (Rat-Hole Mining) முறையிலான சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது குழாய் பொருத்தப்பட்டு உள்ளது. எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளனர்.

 Uttarkashi tunnel collapse Major safety lapses by construction firm

இதனிடையே, உத்தரகாண்ட் சுரங்கத்தில் பணிகள் நடைபெற்ற போது பல்வேறு பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் பாதுகாப்பு விதிகள் பலவற்றையும் மீறி இந்த பணிகளை மேற்கொண்டதாக பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எமெர்ஜென்சி எக்ஸிட் இல்லை: சுரங்கப்பாதையை அமைக்கும் பணியை மேற்கொண்ட நிறுவனம் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால், சுரங்கத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறும் பாதை எதுவும் அமைக்காதது தான். சுரங்கப்பதைகள் தோண்டும் போது நிலையான வழிகாட்டு முறைகளாக எமெர்ஜென்சி எக்சிட் என்பதுள்ளது. அதுவும் 3 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் செல்லும் போது கண்டிப்பாக பேரிடர்கள் ஏற்பட்டால் எஸ்கேப் ஆவதற்காக வழி ஏற்படுத்தி வைப்பது அவசியம்.

பாதுகாப்பு குழாய்கள்: முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி, எஸ்கேப் ரூட் அமைக்கும் பிளான் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது பின்பற்றப்படவில்லை. நீண்ட தொலைவு கொண்ட சுரங்கப் பாதைகளில் தொழிலாளர்கள் அவசர காலங்களில் தப்பிக்க ஏதுவாக trench cages எனப்படும் பாதுகாப்பு குழாய்கள் அமைக்கப்படும். சுரங்கங்களில் அவசர காலங்களில் இந்த பாதுகாப்பு குழாய்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், இந்த சுரங்கங்களில் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனம் அதற்கான எந்த வடிவமைப்பையும் செய்யவில்லை.

விதிகளை பின்பற்றவில்லை: அதேபோல், ஹூம் பைப் என சொல்லப்படும் கான்கீரிட் பைப்களும் சுரங்கத்திற்குள் இல்லை. இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், இதற்கு முந்தைய விபத்தின் போது, கான்கிரீட் பைப்கள் நீக்கப்பட்டதாக கூறினர். அதேபோல், இமயமலை பற்றிய அறிவியல் பூர்வ தரவுகளை வைத்து உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கட்டுமான நிறுவனம் பணியை மேற்கொண்டுள்ளது. இப்படி பல்வேறு விதிகளை காற்றில் பறக்கவிட்டு பணிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

டெக்டோனிக் தட்டுகள்: புவியியல் அடிப்படையில் பார்த்தோமானால், இமயமலைகள் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இருந்தாலும், புவியியல் அடிப்படையில் இது இளமையாகவே உள்ளன. அதேபோல் அவை இந்திய டெக்டோனிக் தட்டுக்கும் யூரேசிய டெக்டோனிக் தட்டுக்கும் இடையிலான மோதலால் இன்னும் வளர்ந்து வருகின்றன.

உத்தரகாண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் டெக்டோனிக் நகர்வுகளின் காரணமாக கடந்த காலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்தன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கடந்த 1807ஆம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவாகியது. இதேபோல் கடந்த 1991 ஆம் ஆண்டில் ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் அபாயம்: டெக்டோனிக் நகர்வுகள் அதிகம் உள்ள அதாவது நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் இருக்கும் இப்பகுதியில் இது போன்று சுரங்கம் அமைக்கும் போது நிலநடுக்கம் ஏற்படும் அபாயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியம். ஆனால் இந்த உத்தரகாண்ட் சுரங்க பணியில் இது போன்ற நிலநடுக்க அபாய விஷயங்கள் எல்லாம் கவனத்தில் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+