40 ஆண்டாக திறக்கப்படாத பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி எங்கே? வி.கே.பாண்டியன் பேட்டி
புவனேஸ்வரம்: பூரி (புரி) ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவி குறித்து ஒடிஸா வளர்ச்சி மேம்பாட்டு திட்டத் தலைவர் வி.கே.பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலை பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை ரதயாத்திரை நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த புகழ் பெற்ற கோயிலின் பொக்கிஷங்கள் அடங்கிய அறையின் சாவி தொலைந்து போனதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஒடிஸா அரசை பாஜக விமர்சித்து வருகிறது.

அந்த கோயிலில் இரு பொக்கிஷ அறைகள் உள்ளன. ஒன்று ரத்ன பந்தர், மற்றொன்று பிடார் பந்தர். ரத்ன பந்தர் என்பது உள் அறை, பிடார் பந்தர் என்பது வெளி அறை. இந்த உள் அறை எனப்படும் ரத்ன பந்தர் கடந்த 1978 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு ஒரு முறை இந்திய தொல்லியல் துறை திறக்கப்பட்டது.
இது குறித்து நியூஸ் 18 தொலைகாட்சிக்கு வி.கே. பாண்டியன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூலம் ரத்னபந்தர் . இது ஸ்ரீ மந்திரின் உள்ளே இருக்கிறது.
இந்த ரத்னபந்தரில் இரு அறைகள் உள்ளன. வெளியே இருக்கும் அறை, உள்ளே இருக்கும் அறை என இரண்டு உள்ளது. உள்ளே இருக்கும் அறையானது கடந்க 40 ஆண்டுகளாக திறக்கவே இல்லை. திருவிழாக் காலங்களில் வெளியே இருக்கும் அறை (outer chamber) மட்டும் திறக்கப்படுகிறது.
அந்த அறையிலிருந்து சுவாமியின் நகைகளை வெளியே எடுத்து சாத்துவோம். அந்த வெளி அறையை திறக்க வேண்டும் என்றால் 3 பேர் கண்காணிப்பில்தான் நடக்கும். பூரி கஜபதி மகராஜின் பிரதிநிதி, சேவாயத்களின் பிரதிநிதி, நிர்வாக பிரதிநிதி ஆகிய மூவரின் கண்காணிப்பில்தான் அதை திறக்க முடியும்.
வெளிப்புற அறையை திறந்தால் மட்டுமே உட்புறம் உள்ள அறையையும் அதன் பூட்டையும் திறக்க முடியும். எனவே கடந்த 40 ஆண்டுகளாக உள்புறம் உள்ள அறையை யாருமே திறந்ததில்லை. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் பாஜக ஏதாவது விமர்சனத்தை வைக்கும். அதிலும் முதல்வர் நவீன்பட்நாயக் மீது விமர்சிக்க எதுவும் இல்லாததால் பூரி ஜெகன்னாதர் கோவில் கருவூல சாவி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
எங்கள் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை, ஏழ்மை ஒழிப்பு, வளர்ச்சி, விளையாட்டு என நிறைய திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே எந்த குறையும் சொல்ல முடியாததால் இது போல் வதந்திகளை பாஜக பரப்புகிறது. பாஜகவை ஒடிஸா மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். இந்த முறையும் அப்படியே செய்வார்கள்.
எப்போதும் விமர்சிப்பதிலிருந்து நியாயமே இல்லாத ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை பாஜக முன் வைத்திருக்கிறது. கடவுளை அரசியலுக்குள் ஏன் இழுக்கிறீர்கள் என்று எங்கள் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். ஒடிஸா அரதோ நவீன் பட்நாயக்கோ ஜெகன்னாதர் கோயில் கருவூல சாவி விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை. உள்புற கதவை திறக்க வேண்டுமானால் நிறைய நடைமுறைகளும் விதிகளும் இருக்கின்றன.
ரத்ன பந்தரை திறப்பதற்கு முன்பு ஏதாவது சேதாரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் வரும் ஜூலை மாதம் உள்புற அறை திறக்கப்படும். இவ்வாறு வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications