காவிரி: மத்திய அரசு மீண்டும் பெரிய துரோகம் செய்துவிட்டது.. வைகோ கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு மீண்டும் பெரிய துரோகம் செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் செயல் திட்டத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகாரமற்ற மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அரசு செயல்திட்டம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு இந்த முறையும் தமிழகத்திற்கு பெரிய அநீதியை நிகழ்த்தியுள்ளது. காவிரியில் உள்ள அணைகள் எல்லாம் எப்போதும் போல மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது கண்டனத்துக்குரியது.
இது முழுக்க முழுக்க நடுவர்மன்ற உத்தரவை திசை திருப்பும் யுக்தி.உச்சநீதிமன்றம் பிப். 16ம் தேதி வழங்கிய தீர்ப்பை 7 நீதிபதிகளுக்கு மேலாக அரசியல் சாசன அமர்வின் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக உடனடியாக தமிழக அரசு மனு செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications