டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்திக்க வேண்டும்: மோடிக்கு வைகோ கடிதம்
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச தேர்தலில் விவசாயிகளுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் கடந்த 13 ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி விவசாயிகளை நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பருவமழை பொய்த்ததாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும், வேளாண் செலவினங்களின் கடுமையான உயர்வு மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், தாங்க முடியாத மனவேதனையால், கடந்த 12 மாதங்களில் 400 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர். அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில், எந்தக் கட்சியையும் சாராத நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு வந்து, இடுப்பில் அரையாடையுடன் கடந்த 14 நாள்களாக ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலையிலேயே படுத்துக்கிடக்கின்றனர்
இரவும் பகலும் சாலையிலேயே படுத்துக் கிடக்கின்றனர். தமிழகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து மடிந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து வந்துள்ளனர். திருச்சி நீதிமன்றதில் ஒரு முன்னணி வழக்குரைஞரான அய்யாக்கண்ணு அவர்கள், தனது வழக்கறிஞர் தொழிலைத் துறந்துவிட்டு, கடந்த 17 ஆண்டுகளாக முழுநேரமும் விவசாயிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு வருகின்றார்.

நிவாரணம் அதிர்ச்சியளிக்கிறது
தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியைச் சமாளிக்கத் தமிழக அரசு ரூ.39,565 கோடி நிதி உதவி கோரியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற விதத்தில், மத்திய அரசு வெறும் ரூ. 1658 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது. அதுவும், அடுத்த வேளாண்மைக்கான இடுபொருள்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் எனத் தாங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். தற்போது விவசாயிகள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
1. நாட்டு உடைமை ஆக்கப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி.
2. வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு
3. உச்சநீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
4. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் அளித்த உறுதிமொழியின்படி, தென்னக நதிகள் இணைபிற்கான பணிகளை முன்னெடுத்தல்.
கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வேதனைகளைத்தான் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற 200 விவசாயிகள் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றனர்.

நன்றி பாராட்டுவார்கள்
அவர்கள் தங்களைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விழைகின்றனர். தாங்கள் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தால், தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளளர் வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications