வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது வாஜ்பாய் உடல்.. மோடி அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் வாஜ்பாயின் உடல் இன்றிரவு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் இன்றிரவு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாஜ்பாயின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டது உடல்
வாஜ்பாயின் புகழுடல் இரவு முழுவதும் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வீட்டில் வைக்கப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு குடும்பத்தினர் முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசியக்கொடி போர்த்தி மரியாதை
முப்படை வீரர்கள் வாஜ்பாய் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பாஜகு மூத்த தலைவர் அத்வானி, வாஜ்பாயின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி அஞ்சலி
அவரை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

5 மணிக்கு உடல் அடக்கம்
இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு ராஜ்காட் அருகே உள்ள விஜய்காட் பகுதியில் வாஜ்பாய் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஒன்றரை ஏக்கரில் நினைவிடம்
டெல்லி விஜய்காட் பகுதியில் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க ஒன்றரை ஏக்கர் நிலத்தை நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications