பல கோடி வர்த்தகம் உருவாக காரணம்.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாஜ்பாய் செய்த காரியம்!
டெல்லி: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் நான்கு வழிச்சாலை அமைத்தார். இதுவே இந்தியா முழுக்க பலகோடி வர்த்தகம் நடக்க காரணமாக அமைந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்துள்ளார். அவர் இந்திய சாலைகளில் நிகழ்த்திய மேஜிக்கை இப்போது நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்.

2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா முழுவதையும் இணைக்கும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நான்கு வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.
வாஜ்பாய் பிரதமராக பணியில் அமர்வதற்கு முன்பு இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரு வழிச்சாலைகளில் தான் மக்கள் பயணிக்க வேண்டும். அதனால் இருசக்கரம், நான்குச்சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். மேலும் செல்லும் இடத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் மக்கள் நிறைய விபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தது.
ஆனால் வாஜ்பாய் கொண்டுவந்த நான்கு வழிச்சாலை திட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர், குறிப்பாக மக்கள் 200 கி.மீ உள்ள தொலைவை இரு வழிச்சாலை இருந்தபோது 6 மணி நேரத்தில் கடந்தார்கள். வாஜ்பாய் கொண்டு வந்த நான்கு வழிச்சாலை திட்டத்தினால் 3 மணி நேரத்தில் தற்போது செல்ல முடிகிறது.
இதனால் பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இதுவே இந்தியா முழுக்க பலகோடி வர்த்தகம் நடக்க காரணமாக அமைத்தது. ஆம் இது இந்தியாவில் பல புதிய தொழிற்சாலை உருவாக காரணமாக அமைத்தது. பல புதிய நிறுவனங்கள் வர காரணமாக அமைந்தது.
தொழிற்சாலைகளுக்கு கனரக பொருட்களை ஏற்றிச்செல்ல முடிகிறது. இது மட்டுமல்லாமல் அவசர தேவைக்காக மருத்துவமனை செல்பவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். மக்கள் இந்த சாலையால் மிகுந்த பயன்பெற்று வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications