ஸ்மிருதி இராணிக்கு பிடித்த ‘கை’ முறுக்கு பிரசாரம்: வானதி சீனிவாசன்
அமேதி: மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணித் தலைவர் ஸ்மிருதி இராணி போட்டியிடும் அமேதி தொகுதியில் மூன்று நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில், "டிவி' நடிகை ஸ்மிருதி இராணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் தலைவர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து பாஜக தலைவர்களும் பிரசாரத்திற்காக அமேதி சென்றுள்ளனர்.

வானதி சீனிவாசன்
சென்னையில் இருந்து, தமிழக பா.ஜ.க பொதுச் செயலர் வானதி சீனிவாசன். இரண்டு நாட்கள், அமேதி தொகுதியில், ஸ்மிருதியுடன் வலம் வந்து ஆதரவு திரட்டினார்.

ராணிக்கு பிடித்த ‘கை’ முறுக்கு
அமேதி புறப்படுவதற்கு முன், ஸ்மிருதிக்கு மிகவும் பிடித்தமான, கை முறுக்குகளை நிறைய வாங்கிச் சென்றுள்ளார் வானதி.

தமிழ்நாட்டு ஸ்பெஷல்
தமிழகத்திற்கு ஸ்மிருதி வரும்போதெல்லாம், வானதியை சந்திப்பது வழக்கம். அப்போது தான், கை முறுக்கு என்றால், ஸ்மிருதிக்கு உயிர் என்பதை தெரிந்து கொண்டார். எனவேதான் இப்போது கை முறுக்கோடு பிரசாரம் கிளம்பிவிட்டார் வானதி.

ரசம் கூட பிடிக்குமாம்
முறுக்கு தவிர சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் பரிமாறப்படும் ரசமும், ஸ்மிருதிக்கு பிடித்த "ஐயிட்டம்'மாம். ரசத்தை பார்சல் செய்ய முடியாது என்பதால், கை முறுக்கு வகைகளை, நிறைய வாங்கிச் சென்றுள்ளார் வானதி.

முறுக்கு டேஸ்ட் சூப்பர்
முறுக்கோடு அமேதி போன வானதியை உற்சாகமாக வரவேற்றுள்ளார் ஸ்மிருதி. ‘கை' முறுக்குகளை ஒரு கை பார்த்து விட்டு தான், பிரசாரத்திற்கே கிளம்பினாராம் ஸ்மிருதி இராணி.

வெகுளி மக்கள்
தனது பிரசார அனுபவம் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வானதி சீனிவாசன். அமேதி தொகுதி மக்கள்.வெகுளிகள். மூன்று தலைமுறையாக காந்தி குடும்பத்தை தாண்டி யோசிக்கத் தெரியாதவர்கள்.முதல் முறையாக மோடியைப் பற்றி பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அமேதியில் மின்சாரமில்லையே
அதிகபட்சம் ஆறு மணி நேரம் தான் மின்சாரம் இருக்கிறது. அதுவும் எப்போது வரும் என்பது தெரியாது என்கிறார். மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகம் திறக்க, மின்சாரத்தை எதிர்பார்த்து, ஊர் மக்களுடன் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

மோடி பிரதமராவார்
மோடி பிரதமரானால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கையில் ராகுலின் தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்
ஸ்மிருதிக்கு வாக்களிப்பதின் மூலமாக, தங்களது கோபத்தை வெளிப்படுத்த மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications