For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் பூஜை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி கேரளாவில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தவருகின்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்போல்லோ நிர்வாகம் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது.

Varalakshmi Sarathkumar special puja for Jayalalithaa

தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன் கேரளாவின் கன்னூர் அகத்தியர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென்று பூஜை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலட்சுமியின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை வரலட்சுமி, அரசியல் ஆர்வத்தில் இதுபோன்று பூஜை நடத்தினாரா? கேள்வி எழுப்பியுள்ளனர் . ஆனால் மற்றொரு தரப்பினர் இளம் நடிகையான இவரின் செயலை பார்த்து பாராட்டியும் வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஷால் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் திருமண தடை நீங்க பூஜை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வரலட்சுமி முதல்வர் ஜெயலலிதாவிற்காக பூஜை நடத்தியதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அம்மா விரைவில் நலம் பெற அகஸ்தியர் ஆசிரமத்தில் பூஜை நடத்தியதாகவும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். வரலட்சுமியின் தந்தை சரத்குமார் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Varalakshmi sarathkumar posted her twitter page, praying for hon'AMMA for a speedy recovery at Sri Agasthya Muni Ashram in Kannur.. may his blessings be bestowed on her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X