தமிழக-கர்நாடக எல்லையை மூட கிளம்பிய வாட்டாள்.. அங்கேயே வைத்துத் தூக்கிய போலீஸ்!
பெங்களூர்: தமிழக-கர்நாடக எல்லையை மூடும் போராட்டத்திற்கு கிளம்பிய, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ், தொண்டர்களோடு கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தையொட்டி தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் ஆரம்பிக்கிறது. இந்த இரு மாநில எல்லையை மூடி போராட்டம் நடத்தப்போவதாக கன்னட சளுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்று மதியம் நூற்றுக்கணக்கான தொண்டர்களோடு வாட்டாள் நாகராஜ் எல்லை பகுதிக்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் முன்பே போலீசார் சாலையை மறிக்கும் வகையில், தடுப்புகளை ஏற்படுத்தி, வாட்டாள் நாகராஜ் மற்றும் அவருடன் சென்ற தொண்டர்களை கைது செய்தனர்.
அப்போது, "நாங்கள் தீவிரவாதியோ.. நக்சலைட்டுகளோ அல்ல.. எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்" என போலீசாருடன் வாட்டாள் நாகராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, அத்திபெலே-ஒசூர் எல்லை பகுதிக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இன்று நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்திற்கு தண்ணீர் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக பரமேஷ்வர் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications