தமிழகத்தில் நாளை பந்த்.. கறுப்பு தினமாக அனுசரிக்க கன்னடர்களுக்கு வாட்டாள் நாகராஜ் அழைப்பு #cauvery
பெங்களூர்: தமிழ் நாட்டில் நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினைக்காக பெங்களூரில் இன்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வாட்டாள், போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் செல்லும் நிலையிலும், அங்கு பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் நடைபெறும் பந்த்தை கன்னடர்கள் கறுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். நாளை நான் கறுப்பு சட்டை அணிய உள்ளேன். கன்னடர்களும் அவ்வாறே செய்ய வேண்டும். பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபடும் கன்னட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்ய ஆரம்பித்துள்ளனர். இத்தோடு இதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கன்னட அமைப்பினரை கைது செய்வது தொடர்ந்தால், கர்நாடக பந்த்துக்கு அழைப்புவிடுக்கப்படும் என்று காவல்துறைக்கு எச்சரிக்கைவிடுகிறேன். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications