காய்கறி வியாபாரி நள்ளிரவில் ஓட ஓட வெட்டிக் கொலை.... சிசிடிவி பதிவால் பரபரப்பு
அகமதாபாத்: காய்கறி வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளது. இந்தக் காட்சிகள் சிசிடிவி கேரமாவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்நகர் அம்பா சவுன் பகுதியில் ரபீக் மக்வானா என்பவர் காய்கறிக் கடையை நடத்தி வந்தார். கடந்த வியாழக்கிழமை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரது கடைக்கு வந்து கடையை வேறு இடத்திற்கு மாற்று இல்லை என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மிரட்டியுள்ளார்கள்.

இதற்கு ரபீக் மறுத்ததால், அவரை அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கத் தொடங்கியது. மேலும் கையில் கொண்டு வந்திருந்த வாள், பேஸ்பால் பேட் உள்ளிட்டவைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் ரபீக் ஓட தொடங்கினார். ஆனாலும் விடாத அந்த கும்பல் ரபீக்கை ஒட ஓட துரத்தி நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
ரபீக்கின் சகோதரர் இர்பான் மக்வானா போலீசாரிடம் சந்தீப்பரத்பாய், ஹர்தீக் உலுவா, சஜித், ஜித்துப்ரபாடி, ராஜா மிஜிக்வாலா, தாக்கு மற்றும் பெயர் தெரியாத இருவர் தனது சகோதரரை வெட்டிக் கொன்றதாக புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவியில் 8 பேர் ஓட ஓட விரட்டி ரபீக்கை வெட்டி கொலை செய்தது பதிவாகியுள்ள காட்சிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications