"பெருமாள்" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..!
ஜம்முவில் பெருமாள் கோயிலுக்கான பூமி பூஜை நடந்தது
ஜம்மு: "இனிமேல் பெருமாளை தரிசிக்க வடமாநில மக்கள், திருப்பதி வரை போகவே வேணாம்.. ஜம்முவிலேயே வெங்கடேச பெருமாள் வர போகிறார்.. இதற்கான கோயில் கட்டப்படும் நிலத்தில் பூமி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது... விரைவில் இந்த கோயிலும் திறக்கப்பட்டுவிடும்..!
ஜம்மு என்றாலே அமர்நாத் கோயிலும், வைஷ்ணவி தேவி கோயிலும் தான் ஃபேமஸ்.. ஜம்முவில் மட்டுமல்ல, வடமாநிலங்களுக்கே இந்த கோயில்கள்தான் சிறப்பை தந்து வருகின்றன.
இந்நிலையில், பெருமாள் கோயில் ஒன்றை ஜம்முவில் நிறுவலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.. அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 வருஷங்களுக்கு முன்பே குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.

வசதிகள்
இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட முடிவானது.. வெறும் கோயில் மட்டுமல்லாமல், அங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கான வசதிகள், கோயில் ஊழியர்களுக்கு தங்கும் வசதிகள், வேத பாடசாலைகள், ஆன்மீக, தியான மய்யங்கள், வண்டிகள் நிறுத்துவதற்கான இடங்கள் என தனித்தனியாக கட்டவும் திட்டங்கள் தயாராக உள்ளது.

நிலம்
கோயில் கட்டப்படும் இந்த நிலத்தில்தான் பூமி பூஜை தற்போது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.. காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங், திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

அடிக்கல்
அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பேசும்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுமான பணி எப்போது ஆரம்பிக்கும் என்று வட இந்திய மக்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.. ஒருவழியாக மாதா வைஷ்ணவி தேவி மண்ணிலேயே ஏழுமலையான் கோயிலும் அமைய போகிறது.. இதன்மூலம் வடமாநில மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறி இருக்கிறது... காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் இது.. வெங்கடேஸ்வரா கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ஆன்மீக தலமாக உருவெடுக்கும். இங்கு பணியாற்றும் பூசாரிகள், சூப்பர்வைசர் போன்றோரும் இங்கு உள்ளூர் மக்களாகவே கருதப்படுவர்" என்றார்.

சுற்றுலா துறை
பெருமாள் கோயில் தங்கள் மாநிலத்திலேயே வர உள்ளதால் ஜம்மு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. இந்த கோயிலை கட்டுவதற்கு இன்னொரு முக்கிய காரணம், இதனால் ஜம்முவில் சுற்றுலாத்துறையும் வளர்ச்சி அடையும், அதனால் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. ஆக மொத்தம் பெருமாளை தரிசிக்க, திருப்பதி வரை வடமாநில மக்கள் இனி செல்லவே தேவையில்லை..!
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications