வெளிநாடு ஓடவில்லை.. இந்தியாவில்தான் இருக்கிறேன்.. ரூ.4,232 கோடி மோசடி செய்த விக்ரம் கோதாரி தகவல்!
ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி, தான் எங்கேயும் ஓடவில்லை, இந்தியாவில்தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி, தான் எங்கேயும் ஓடவில்லை, இந்தியாவில்தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோட்டோமாக் பென்ஸ் நிறுவன தலைவர் விக்ரம் கோதாரி ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார். இந்த சம்பவம் புயலை கிளப்பி இருக்கிறது.
இப்போதுதான் நீரவ் மோடி 11,360 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அமெரிக்கா சென்று உல்லாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோடி
ரோட்டோமாக் பென்ஸ் என்பது பிரபல எழுதுகோல் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இவர்களுக்கு நிறைய கிளை கம்பெனிகளும் இருக்கிறது. இதன் தலைவர் விக்ரம் கோதாரி 800 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து உள்ளதாக கூறப்பட்டது. தற்போதுதான் இவர் மொத்தமாக ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பணம் இல்லை
இதற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவர் மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். இவர் கொடுத்த 600 ரூபாய் செக் கூட பவுன்ஸ் ஆகி திரும்ப வந்து இருக்கிறது.

எங்கேயும் செல்லவில்லை
இவர் சுவிட்சலார்ந்து சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் எங்கும் செல்லவில்லை என்று விக்ரம் கோதாரி குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில்தான், உத்தர பிரதேசத்தில்தான் இருக்கிறேன் என்றுள்ளார்.

வங்கியுடன் பேச்சுவார்த்தை
தற்போது வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பவுன்ஸ் ஆக கூடிய செக் எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த விசாரணையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications