இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவர் விஜயகாந்த்: பிரேமலதா
டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டார். அவர் மக்களுக்காக உழைக்க இறைவனால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்று தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
டெல்லி பிரதேச தேமுதிக சார்பில் நேற்று அங்குள்ள ஜந்தர் மந்தரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறுகையில்,

டெல்லி தமிழர்கள்
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பில் இருந்தே தமிழர்கள் டெல்லியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக கிடைக்காமல் உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என்றார் பிரேமலதா.

உதவுவதில்லை
டெல்லிக்கு வரும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இங்குள்ள தமிழர்களை கூட்டம் கூட்ட பயன்படுத்துகிறார்களே தவிர அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பிரேமலதா குற்றம் சாட்டினார்.

பனங்காட்டு நரி
நலிவடைந்த ஏழை தமிழர்கள் ஜுக்கி ஜோப்டி என்ற குடிசைப் பகுதியில் தான் இன்றும் வசிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் தமிழர்களின் தலைவிதி மட்டும் அப்படியே தான் இருக்கிறது.
அதை மாற்றவே தேமுதிக டெல்லி வரை வந்துள்ளது. விஜயகாந்த் ஒரு பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டார் என்று பிரேமலதா கூறினார்.

இறைவனால் அனுப்பப்பட்டவர்
விஜயகாந்த் தான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார். டெல்லி தேர்தலில் தேமுதிகவுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கப் போகிறது என்று சிலர் ஏளனம் செய்கிறார்கள். தமிழகத்தில் கூட அவ்வாறு தான் கூறினார்கள். தேமுதிக 101வது கட்சி என்றார்கள். ஆனால் தற்போது தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சியாக தேமுதிக உள்ளது. மக்களுக்காக உழைக்க இறைவனால் அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். இனி மேல் டெல்லிக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருப்போம் என்றார் பிரேமலதா.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications