கலவர அச்சம்.. பெங்களூரில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும் நிறுத்தம்.. ஆனந்தபவன் ஹோட்டல்களில் தாக்குதல்
பெங்களூர்: தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பெங்களூரில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரில் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல்கள் சுமார் 30 பகுதிகளில் இயங்குகின்றன. இதில் மைசூர் ரோடு- சாட்டிலைட் பஸ் நிலையத்தில் உள்ள அடையார் ஆனந்தபவன் மீது 50 பேருக்கும் மேற்பட்ட கும்பல் இன்று காலை, கல் வீசி தாக்குதல் நடத்தியது. கண்ணாடிகளை உடைத்து தூள் தூளாக்கியது அந்த கும்பல். அருகிலிருந்த வேறு கடைகளிலும் கற்கள் விழுந்து சேதமடைந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கலவரக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல இந்திராநகர் பகுதியில் பூர்விகா செல்போன் ஷோரூம் மீதும் கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கிரி நகர் பூர்வீகா ஷோரூமிலும் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவம் அரங்கேறியது.
இதனிடையே, பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மதியம் சுமார் 1 மணியளவில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெங்களூர் நகரத்தில் அறிவிக்கப்படாத பந்த் போன்ற காட்சி நிலவியது. பெங்களூர் புறநகர் பகுதியில் இரு தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெங்களூர் நகருக்குள், தமிழக பதிவெண் தனியார் பஸ் கல்வீச்சுக்கு உள்ளாகியது.
நிலைமை மோசமானதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரக்காரர்கள் ஆங்காங்கு தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து மதியம் 3.30 மணியளவில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும், பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் பெங்களூரில் வன்முறை தொடர்ந்தது. பன்னேர்கட்டா சாலையில், உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலிலும் விஷமிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பத்தே நிமிடங்களில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
60 sec: தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள், ஹோட்டல்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பெங்களூரில் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்கள், ஹோட்டல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மதியம் சுமார் 1 மணியளவில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெங்களூர் நகரத்தில் அறிவிக்கப்படாத பந்த் போன்ற காட்சி நிலவியது. பெங்களூர் புறநகர் பகுதியில் இரு தமிழக லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெங்களூர் நகருக்குள், தமிழக பதிவெண் தனியார் பஸ் கல்வீச்சுக்கு உள்ளாகியது. நிலைமை மோசமானதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். கலவரக்காரர்கள் ஆங்காங்கு தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து மதியம் 3.30 மணியளவில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும், பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் பெங்களூரில் வன்முறை தொடர்ந்தது. பன்னேர்கட்டா சாலையில், உள்ள அடையார் ஆனந்தபவன் ஹோட்டலிலும் விஷமிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பத்தே நிமிடங்களில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications