மாத சம்பளம் ரூ. 3000.. போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்த ஏழை பெண்.. வைரலாகும் வீடியோ
அமராவதி: ஆந்திரத்தில் ஏழை பெண் ஒருவர் லாக்டவுனின் போது ரோந்து பணியில் இருந்த போலீஸாருக்கு குளிர்பானங்கள் வாங்கிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவசியமில்லாமல் பொதுவெளியில் சுற்றித் திரிவதை தடுக்க போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா தொற்று நோய் என்பதால் இவர்கள் இரவு பகல் பாராமல் ரோந்து பணியில் ஈடுபட்டு ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் அந்த பகுதியிலுள்ள பெண் ஒருவர் குளிர்பானங்களை அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மாத சம்பளமாக ரூ 3000 பெறும் அந்த பெண் களைப்பாக இருக்கும் போலீஸாருக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது வருமானம் ரூ 3000 ஆகும். ஆனால் நம்மை காக்கும் மக்களை கவனித்து கொள்ள வேண்டும் என விரும்பினேன் என்றார்.
Proud🙏🏻
— IMShubham (@shubham_jain999) April 15, 2020
She said “My income is 3000 only but i want to take care the people who saving us”#IndiaFightsCorona @ShefVaidya @madhukishwar @TandonRaveena @ActorMadhavan @Payal_Rohatgi @nistula @NupurSharmaBJP @atahasnain53 @TheSatishDua @sonalgoelias @TVMohandasPai @ImRaina @jkd18 pic.twitter.com/JUxYB7JJPl
இவரை போலீஸார் பாராட்டினர். இந்த வீடியோவை முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நர லோகேஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். லாக்டவுனின் போது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது இந்த வீடியோ. அந்த பெண்ணின் விலைமதிப்பில்லாத உதவியை உண்மையிலேயே பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications