காவிரி: ராஜினாமா செய்துவிட்டு நேரா ஜெயிலுக்கு போங்க... 'சித்து'வுக்கு மாஜி அமைச்சர் பரபர கடிதம்
மைசூரு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதால் முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு விஸ்வநாத் எழுதிய கடிதம் விவரம்:
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் இங்கு உள்ள கபினி, கே.ஆர்.எஸ், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி இந்த 4 அணைகளின் நீர்மட்டத்தை வைத்துதான் குடிப்பதில் இருந்து விவசாயம் வரை செய்து வருகின்றோம். ஆனால் இந்த ஆண்டு பருவ மழையானது போதுமான அளவு இல்லை.

35 டிஎம்சிதான்...
இதனால் அனைத்து அணைகளிலும் நீர் மட்டமானது மிக குறைந்த அளவில்தான் உள்ளது. மொத்தம் 35 டி.எம்.சி தண்ணீர் தான் அணைகளில் தற்போது இருக்கும்.

எப்படி பாதுகாப்பது?
இதிலும் தமிழகத்துக்கு 20டி.எம்.சி தண்ணீரை கொடுக்க வேண்டும். எஞ்சிய 15 டி.எம்.சி நீரை வைத்து மாநில மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?

தாரை வார்ப்பதா?
கர்நாடக மாநில மக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தான் தமக்கு முக்கியம் எனக்கூறி தமிழகத்துக்கு தண்ணீரை தாரை வார்த்துவிட்டார் மாநில முதல்வர் சித்தராமையா.

ராஜினாமா செய்க
ஆகையால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு தாமாகவே சிறைக்கு சென்று குற்றவாளியாக அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சித்தராமையாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications