சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, 'உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்' என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.
பெங்களூர்: சரணடைய 4 வாரம் கால அவகாசம் கோரி சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்ட நிலையில் அதை செவிமடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவை பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நேற்றே ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அவரோ நேரில் ஆஜராக 4 வாரங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம்கோர்ட் இன்று ஏற்க மறுத்துள்ளது.

சசிகலாவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் துள்சி இன்று ஆஜராகி வாய்மொழியாக இந்த கோரிக்கையைவிடுத்தார். ஆனால் சில வினாடிகள் கூட இந்த கோரிக்கையை செவிமடுக்க நீதியரசகர்கள் மறுத்துவிட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியபினாக்கி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அதே பெஞ்ச் முன்னிலையில்தான் சசிகலா தரப்பு இக்கோரிக்கையை இன்று வைத்திருந்தது.
ஆனால் நீதிபதிகளோ, 'உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்' என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர். இதனால் பதறியடித்த சசிகலா சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூர் கிளம்பியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications