ம.பியில் மக்களை கவர்ந்த‘ஸ்மார்ட்’வாக்குச்சாவடி.. ஏஐ கேமரா ஹைடெக் வசதியுடன் அசத்திய தேர்தல் ஆணையம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஹெடெக் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட் வாக்குச்சாவடியில் ஏஐ கேமரா வசதியுடன் கூடிய செல்பி பாயிண்ட் உள்பட பல ஹைடெக் தொழில் நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சி கவர்ச்சிகர வாக்குறுதிகளுடன் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது.

அதேபோல், ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதால் பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அங்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக ஸ்மார்ட் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வரிசையில் நிற்க வேண்டாம்: இந்தூர் மாவட்டத்தில் உள்ள நந்தா நகர் சட்டமன்ற தொகுதி எண் 2 ல் உள்ள கனகேஷ்வரி தேவி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தான் இந்த சிறப்பு ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஸ்மார்ட் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் லைனில் காத்திருக்க தேவையில்லை. வாக்காளர்கள் வரும் போதே அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விடும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வரும் வரை வாக்காளர்கள் அங்கு போடப்பட்டுள்ள சேர்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். வாக்குச்சாவடி அறைக்கு வெளியே செல்பி பாயிண்ட் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்துடன் செயல்படும் இந்த ஏஐ கேமராவில் வாக்களித்த பிறகு விரலில் வைக்கப்பட்ட மையுடன் வாக்காளர்கள் செல்பி எடுத்துக் கொள்ளலாம்.
செல்பி எடுத்த வாக்காளர்கள்: ஏஐ கேமரா முன்பாக தங்கள் ஆட்காட்டி விரலை காட்டியபடி நின்றால் மட்டும் போதும், ஏஐ கேமிரா தானாகவே புகைப்படம் எடுத்துவிடும். அதன்பிறகு அந்த இயந்திரத்தில் ஒரு பார் கோடு தோன்றும். அதை ஸ்கேன் செய்தால் நமது செல்போனுக்கு அந்த செல்பி புகைப்படத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதனை வாக்காளர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்" என்றனர்.
அதி நவீன் அதொழில் நுட்பத்துடன் வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடியை வாக்காளர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. மதியம் 12 மணி வரையிலான நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 28.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications