4வது கட்ட லோக்சபா தேர்தல்.. 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு.. 54% வாக்குகள் பதிவு!
Recommended Video
டெல்லி: இன்று நாடு முழுக்க 4ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 4வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 54% வாக்குகள் பதிவாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது. காலை 7 மணிக்கு இத்தொகுதிகளில் வாக்குப் பதிவு துவங்கியது.

மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள் மற்றும் ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்றது. ஆக மொத்தம் 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 71 தொகுதிகள் தேர்தலை சந்தித்தது. பெரும்பாலும் ஹிந்தி பேசும் மாநிலங்களாகும்.
இதேபோல, ஒடிசா சட்டசபை தேர்தலில் எஞ்சிய 41 தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெற்றது. காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
9 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம் பின்வருமாறு:
- ஒடிசாவில் 6 மணி வரை 64.05% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- ராஜஸ்தானில் 6 மணி வரை 62.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மத்திய பிரதேசத்தில் 6 மணி வரை 65.86% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- காஷ்மீரில் 6 மணி வரை 9.8% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- ஜார்கண்டில் 6 மணி வரை 63.40% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- பீகாரில் 6 மணி வரை 53.67% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மேற்கு வங்கத்தில் 6 மணி வரை 76.47% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- மகாராஷ்டிராவில் 6 மணி வரை 51.06% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- உத்தர பிரதேசத்தில் 6 மணி வரை 53.12% வாக்குகள் பதிவாகி உள்ளது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications