எல்.இ.டி திரையில் 'அந்த வாசகங்கள்..' கண்ணை மூடிய பெண்கள்.. அதகளமான ரயில் நிலையம்.. இந்தியாவில் தான்
பாட்னா: பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதேபோல பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான(ஆபாச) வார்த்தைகள் ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்கள் பயண தேவைக்கு பெரும்பாலும் ரயில்களைத்தான் சார்ந்து இருக்கின்றனர் இதனால், ரயில் நிலையங்களில் கூட்டம் எப்போதும் அலைமோதும். பல நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் வரும் நடைமேடையை மக்கள் அறிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்களில் பல இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் இருப்பதை காண முடியும்.

எடுத்துக்கட்டாக சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் இந்த எல்.இ.டி திரைகள் நடைமேடைகளில் பார்த்தால் தெரியும். பல நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையங்களில் பெரும்பாலும் இந்த எல்.இ.டி திரைகள் இருக்கும். ரயில்கள் வரும் பிளாட்பார்ம், வருகை தரும் நேரம், புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் ஓடிக்கொண்டு இருக்கும்.
தொலை தூரங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ரயில்கள் வரும் நடைமேடையை அறிந்து கொள்ள இந்த எல்.இ.டி திரைகளில் ஒடும் அறிவிப்புகள் பெரிதும் பயனாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தின் இருந்த எல்.இ.டி திரைகளில் திடீரென ஆபாச படங்கள் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் இப்படி ஆபாச படங்கள் ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு உடனடியாக ரயில் நிலைய போலீசாரிடம் புகார் செய்தனர். ரயில்வே நிர்வாகமும் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, ஒப்பந்த அடிப்படையில் எல்.இ.டி திரைகளில் அறிவிப்பு வெளியிடும் பணிகளை செய்து வந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பீகாரில் உள்ள பஹல்பூர் ரயில் நிலையத்தில் உள்ள எல்.இ.டி திரைகளில் திடீரன முகம் சுழிக்க வைக்கும் வகையிலான இழிவான வார்த்தைகள் ஓடியது. முதல் சில நொடிகள் பயணிகள் இதை கவனிக்கவில்லை. ஆனால், இந்த வார்த்தைகள் சுமார் 10 நிமிடம் வரை திரையில் ஓடியது.
இதை கவனித்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பயணிகளும் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையத்தில் இதுபோன்ற இழிவான வார்த்தைகள் ஓடியது பலரையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த ஆபாச வார்த்தைகள் ஓடியதை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் பணியில் இருந்த டெக்னிஷியனிடம் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications